கையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வைரலாகும் வேதனை வீடியோ!
மது அருந்திய கல்லூரி மாணவிகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
நாகை: ஒரு கையில் பீர்பாட்டில்.. இன்னொரு கையில் ஸ்நாக்ஸ் என்று இளைஞருடன் இளம்பெண்கள் தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு அறையில் வட்டமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.. இளம் கல்லூரி 2 பேர் பெண்கள் யூனிபார்மில் உள்ளனர்.. மேலும் சில பெண்கள் அந்த அறையில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. ஒரே ஒரு இளைஞர் மட்டும் அந்த பெண்களுடன் உட்கார்ந்துள்ளார்... நடுவில் பீர்பாட்டில்களும், ஸ்நாக்ஸ்களும் தட்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நடந்த சம்பவம் இது.. ஒரு மாணவி கையில் பீர் பாட்டில், இன்னொரு மாணவி கையில் ஸ்நாக்ஸ்.. அந்த இளைஞர் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்து எடுக்கிறார்.. எல்லோரும் சேர்ந்து தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி உள்ளது அந்த வீடியோ!

அதிர்ச்சி
இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. அத்துடன் கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.

தற்கொலை?
வைரலான இந்த வீடியோ கல்லூரி நிர்வாகத்தின் பார்வைக்கு செல்ல.. சம்பந்தப்பட்ட மாணவிகளை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது உறுதிப்படுத்ததப்படவில்லை.. ஆனால் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மதுக்கடைகள்
தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடைகளை மூட முடியவில்லை. மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது.

அதிர்ச்சி
இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications