பெயரை மாத்தனுமா? இது தமிழ்நாடு! பானிபூரி விற்க வந்த வடநாட்டு கும்பல்! விளாசிய திமுக ஆர் எஸ் பாரதி!
நாகை : கலைஞர் மற்றும் பேராசிரியர் இல்லாத நேரத்தில் திமுகவை பார்த்து சவால் விடும் அளவிற்கு வடநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது எனவும் பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்தே திமுக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை அவர் முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தவிர ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதனம், அகண்ட பாரதம், திருக்குறள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆளுநருக்கு எதிராக திரும்பி இருக்கின்றன.

ஆளுநர் ரவி
மேலும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த ஆளுநர் ரவி தற்போது பேசியிருக்கும் பேச்சு கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த புதன்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு குறித்து பேசியது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுவதும் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும் இவற்றை உடைக்க வேண்டும்

தமிழ்நாடு
தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா பாரதத்தின் அடையாளம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என கூறினார். ஆளுநர் ஆர் என் ரவியின் தமிழ்நாடு - தமிழகம் குறித்த பேச்சு அரசியல் தாண்டி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் திமுக தலைவர்களும் பிற கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆர் எஸ் பாரதி
இந்நிலையில் பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மறைந்த பொது செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளை கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல்
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசுகையில், கலைஞர் மற்றும் பேராசிரியர் இல்லாத நேரத்தில் திமுகவை பார்த்து சவால் விடும் அளவிற்கு வடநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது, பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர் வடநாட்டில் பிழைப்புக்காக தமிழகம் வந்த கும்பல் திராவிடம் என்றால் என்ன என்று தற்போது கேள்வி எழுப்புகின்றனர். பேராசிரியர் மற்றும் கலைஞர் ஆகியோர் இல்லை என்று நினைத்து சிலர் திமுகவிற்கு சவால் விடுகிறார்கள். பத்து பேராசிரியர் மற்றும் பத்து கலைஞருக்கு சமமாக செயல்படுகிறார் தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கும் வடநாட்டு காரர் தற்போதைய ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை பெறுவதற்கு திமுக கடுமையாக உழைத்து இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications