"நீங்கள் மோடி அல்ல.. நீங்கள் ராகுல்.." கலகலப்பூட்டிய ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாங்கள் உங்களை ஆதரிக்க காரணம் நீங்கள் மோடி அல்ல, ராகுல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாகர்கோவிலில் திமுக- காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்திராவே வருக நல்லாட்சியை தருக என இந்திரா காந்தியை கருணாநிதி அழைத்தார். அதன்பின்னர் இந்திராவின் மருமகளே வருக, நல்லாட்சியை தருக என்று சோனியா காந்தியை வரவேற்றார்.
அது போல் நானும் உங்களை அழைக்கிறேன். ராகுலே வருக ஒளிமயமான இந்தியாவை தருக. நாங்கள் உங்களை ஆதரிக்க ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. நீங்கள் மோடி அல்ல, நீங்கள் ராகுல். எனவே அதனால்தான் உங்களை ஆதரிக்கிறோம் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications