எங்களைப் பிரிக்கப் பார்க்கிறாங்க.. தோத்துப் போய்ருவாங்க.. பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எங்களை பிரிக்க நினைத்தால் தோத்துப் போய்ருவாங்க - பொன் ராதாகிருஷ்ணன்

    நாகர்கோவில்: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலபேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி குறித்து நாகர்கோவிலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற பெரியோர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    some are trying to break admk alliance, says pon radhakrishnan

    அப்போது, அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடைபெறுவதாக தமிழக முதல்வர் கூறிய கருத்தில் உண்மை உள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலபேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியில் வைகோ உட்பட நால்வர் அணி இருக்கும் வரையில் யாருக்கும் எந்த வேலையும் இல்லை. அவர்களே அந்த வேலையை செய்வார்கள்.

    some are trying to break admk alliance, says pon radhakrishnan

    வைகோ இது வரை திமுகவை தாக்கு தாக்கு என தாக்கிவிட்டு இப்போது தாங்கு தாங்கு என தாங்கும் நிலையை பார்த்தால் வேதனையாக உள்ளது. நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஓர் அணியில் சேரவேண்டும் என நினைக்கிறோம்.

    some are trying to break admk alliance, says pon radhakrishnan

    தேமுதிக தங்கள் கூட்டணியில் சேரும் என்ற நம்பிக்கை தற்போதும் உள்ளது. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூறி நடைபெறும் போராட்டம் அரசியல் எதில் எல்லாம் விளையாடுகிறது என்பதை காட்டுகிறது.

    தேர்தல் நேரத்தில் பாஜக மீது வரும் விமர்சனங்கள் பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது. குமரியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற வில்லை என குற்றம் சாட்டும் காங்கிரஸ் செயல் தலைவர் வசந்த குமாருக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நாங்குநேரி தொகுதி பற்றியே தெரியாது. இதில் குமரிமாவட்டத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும் என தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+