Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையில் குலுங்கிய நாமக்கல்..4 பேரின் உயிரை பறித்த பட்டாசு விபத்து..எப்படி நடந்தது? காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசு இன்று அதிகாலை வெடித்து சிதறியது. இதில் அருகில் உள்ள வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனதுடன் 4 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை நாமக்கல்லை உலுக்கிய இந்த பட்டாசு விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள மேட்டுத்தெரு பகுதியில் தில்லைக்குமார் என்பவர் மனைவி பிரியா தாய் செல்வி மற்றும் தனது 3 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

தில்லைக்குமார் அப்பகுதியில் 'தில்லை பயர் ஒர்க்ஸ்' என்ற பட்டாசு கடையையும் நடத்தி வந்துள்ளார்.

அதிகாலையில் நடந்த விபத்து

அதிகாலையில் நடந்த விபத்து


இந்தநிலையில், தில்லைக்குமார், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசுகள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அதிக அளவு பட்டாசுகளை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அவரது ஊரில் கோவில் திருவிழா நடக்க இருப்பதால் அதற்காகவும் அதிகளவில் பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் வைத்து இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் வைத்திருந்த இந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச்சிதறியது.

தரைமட்டமாகிய வீடு

தரைமட்டமாகிய வீடு

இந்த பயங்கர விபத்தில் மேட்டுத்தெரு பகுதி ஒரு நிமிடம் உறைந்து போனது என்றுதான் சொல்ல வேண்டும். பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச்சிதறின. அதோடு பட்டாசு வெடித்ததால் வீடு முழுவது தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில் தில்லைக்குமாரின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியது. அவரது வீடு மட்டுமின்றி அருகில் உள்ள 4 வீடுகளும் இந்த விபத்தில் இடிந்து தரைமட்டமாகியதாக கூறப்படுகிறது.

10-க்கும் மேற்பட்ட வீடுகளில்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில்

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்ததால் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அருகில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியே கரும்புகையுடன் காட்சியளித்தது. மக்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த பட்டாசுகள் வெடித்ததில் வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டு இருந்த தில்லைக்குமார் மற்றும் வீட்டின் கீழ் தளத்தில் படுத்து உறங்கிய மனைவி பிரியாவும், தாய் செல்வியும் உயிரிழந்தனர். அதோடு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெரியக்காள் என்ற மூதாட்டியும் உயிரிழந்தார்.

 3 மணி நேரம் போராடி

3 மணி நேரம் போராடி

தில்லைக்குமார் வீட்டின் அருகில் இருந்த 4 வீடுகளில் தீ பற்றியது. இதனால், சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

என்ன தான் காரணம்?

என்ன தான் காரணம்?

அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. பட்டாசுகள் வெடித்ததோடு, வீட்டில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் அதிக அளவில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்ததால் பட்டாசுகள் உராய்வு ஏற்பட்டு வெடித்ததா? அல்லது மின் கசிவு காரணமாக தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்ததா? சிலிண்டர் கசிவால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தடயவியல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் துறையின் ஆய்வு முடிவுக்குப் பிறகே பட்டாசு விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

சம்பவ இடத்தில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியம், சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் மற்றும் நாமக்கல் எம்.எல்.ஏ உள்பட உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகினர். அதிகாலையில் நாமக்கல்லை உலுக்கிய இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+