அட கொடுமையே! பாஜக நடத்திய கபடி போட்டி.. விளையாடகூட வராத அணிகள் -மணி கணக்கில் காத்திருந்த எல்.முருகன்
நாமக்கல்: பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கலில் பாஜக நடத்தப்பட்ட சார்பில் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டியில் எந்த அணிகளும் விளையாட வராததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 2 மணி நேரம் காத்திருந்தார். கடைசியில் 2 அணிகள் மட்டுமே விளையாட வந்ததால் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோட்டில் நேற்று கபடி போட்டி தொடங்கியது

பொங்கல் சிறப்பு கபடி போட்டி
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினம் மற்றும் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அலுவலகத்திற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி விளையாட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

எல்.முருகன் தொடங்கி வைத்த போட்டி
இந்த போட்டியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்து வீரர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார். இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த போட்டியில் முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசு ரூ 15 ஆயிரம் ரூபாயும் ரொக்க பணமும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

விளையாட வராத அணிகள்
இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த போட்டியின் துவக்க விழாவான நேற்று முதல் போட்டியில் "செவன் வாரியஸ்" அணியும் "ராமவிலாஸ்" அணியும் போட்டியிட்டனர். இதில் ராமவிலாஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியானது 5 மணியளவில் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விளையாட எந்த அணிகளும் வரவில்லை. அதன்பின் 7 மணியளவில் இரண்டு அணிகள் மட்டுமே வந்ததன.

காத்திருந்த எல்.முருகன்
அந்த அணிகளுக்கு இடையேயான போட்டியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியை துவக்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்பும் போட்டியில் பங்கேற்க யாரும் வராத நிலையில் இன்றைய போட்டி முடித்து வைக்கப்பட்டது. இன்று யாரும் பங்கேற்காமல் இருந்தால் ராமவிலாஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம். மேலும் கபடி போட்டியை காண பாஜக தொண்டர்களே வராததால் மைதானம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications