டொக் டொக்.. சத்தம்.. உள்ளே போன போலீஸ்.. வீணாய் போன ராஜதந்திரம்.. விரக்தியில் திருடன்
நாமக்கல் : ATM இயந்திரத்தை உடைத்து உள்ளே சென்ற வடமாநில இளைஞன், அதில் இருந்து வெளியே வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டதால் போலீசாரிடம் சிக்கினான். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் அணியாபுரத்தில் நடந்துள்ளது. அந்த கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
நாமக்கல் மாவட்டம் அணியாபுரத்தில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு காவலாளிகள் யாரும் இல்லை.
இதனால் அந்த பகுதியில் ரோந்து செல்லும் போலீசார் ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தலையை தூக்கி பார்த்தான்
அந்தவகையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் போலீசார் ரோந்து பணிக்குச் சென்றுள்ளனர். அப்படியே ஏ.டி.எம்-ல் இருந்து சத்தம் வருவதை அறிந்து உள்ளே சென்று பார்த்து இருக்கிறார்கள். அப்போது அங்கு ஒருநபர் இயந்திரத்திற்குள் இருந்து தலையை தூக்கிப் பார்த்திருக்கிறான்.

வெளியே வர முடியவில்லை
இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார், அவனை வெளியில் வர சொல்லி எச்சரித்தார்கள். ஆனால், வசமாக உடல் மாட்டிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் இயந்திரத்திற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டான். பின்னர் அதில் இருந்து அந்த கொள்ளையனை வெளியே கொண்டு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர்.

பீகார் இளைஞன்
அந்த விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திராய் என்பது தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பிரளியில் உள்ள தனியார் கோழித் தீவன ஆலையில் மூட்டைத் தூக்கும் வேலைப் பார்த்து வந்ததும் பணத்தை திருட திட்டம் தீட்டி கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

தப்பிய பணம்
மேலும் திட்டமிட்டு ஏ.டி.எம் பின்பக்கமாக துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற வடமாநில தொழிலாளி உபேந்திராய், இயந்திரத்திலேயே சிக்கி கொண்டதால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. கைது செய்யப்பட்ட வட மாநில தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications