Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H-1B visa ரூல்ஸ் மாற்றம்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெரிய சிக்கல்.. டிரம்ப் முடிவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை விடிந்ததும் (அமெரிக்காவில்) ஒரு புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யும் நிறுவனங்கள், ஒரு ஊழியருக்கு 100,000 டாலர் (சுமார் ₹88 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதை செலுத்தாத விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். எனினும், அமெரிக்காவின் தேசிய நலன் கருதி சில விதிவிலக்குகள் மட்டும் அனுமதிக்கப்படுமாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் அறிவிப்புகளால் இந்தியா தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. வர்த்க வரி 50 சதவீதம் என்று அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினார். அடுத்த அதிரடியாக திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

71 percent Indians affected by increase in US H-1B visa fees Full details about the 100 000 rules

71 சதவீதம் இந்தியர்களுக்கு பாதிப்பு

ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இப்படி அறிவித்திருக்கிறாராம் டிரம்ப். இனி 88 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டுமே விசா கிடைக்கும் என்றும், அப்படி கட்டணம் செலுத்தவில்லை என்றால் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஹெச்1பி விசா கட்டணம் வெறும் 1.32 லட்சம் என்கிற அளவில் தான் இருந்தது. இப்போது கட்டணம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பு உலகின் பல்வேறு நாடுகளை பாதிக்கும் என்றாலும் இந்தியாவுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில், H-1B விசா வைத்திருப்பவர்களில் சுமார் 71% பேர் இந்தியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்திய IT நிறுவனங்களுக்கு பெரும் சவால்

இன்போசிஸ், விப்ரோ, காக்னிசண்ட் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்களுக்கு தேவையான திறன் மிகுந்த பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் இன்ஜினியர்களை பணியமர்த்த இந்த ஹெச்1பி விசா திட்டத்தையே பெரிதும் நம்பி இருந்தன.

அமெரிக்காவில் செட்டில் ஆக முடியாது

H-1B விசாக்கள் பெற பொதுவாக வெறும் 1500 டாலர் தான் கட்டணம். அது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதை ஆறு ஆண்டுகள் வரை புதுப்பிக்கலாம். ஆனால், இனி ஆண்டுக்கு 100,000 டாலர் கட்டணம் என்பது பல ஆண்டுகளாக கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்திய ஐடி ஊழியர்களை அமெரிக்காவில் தொடர்ந்து பணியமர்த்துவதை நிறுவனங்களுக்கு மிகவும் கடினமாக்கி உள்ளது. அதாவது கிட்டத்தட்ட இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் போய் செட்டில் ஆவது கடினமாகிவிடும்.

1 லட்சம் டாலர் இல்லாவிட்டால் விசா நிராகரிப்பு

டிரம்பின் புதிய அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு வர விரும்பும் வெளிநாட்டு பணியாளர்களின் H-1B விண்ணப்பங்கள், 100,000 டாலர் கட்டணத்துடன் தாக்கல் செய்யப்படாவிட்டால், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளரால் நிராகரிக்கப்படுமாம். கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை விசா கேட்டு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதை விசா நடைமுறையின் போது சரிபார்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டம்

இந்த கட்டண விதி, அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் டிரம்பின் பரந்த கொள்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் அதிபரான பின்னர், அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று கொள்கையை அறிவித்தார். அதன்படி அனைத்து வேலைவாய்ப்பு உயர்வுகளும் அமெரிக்காவில் பிறந்த பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்க விரும்புகிறார். அதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறாராம்.

ஐடி வேலை இழப்பு

புள்ளிவிவரங்களின்படி, 2003 நிதியாண்டில் H-1B விசாக்களைப் பெற்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் பங்கு 32% ஆக இருந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் அது 65% க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி பட்டதாரிகளிடையே அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் முறையே 6.1% மற்றும் 7.5% ஆக இருக்கிறதாம். இது அமெரிக்காவில் உயிரியல் அல்லது கலை, வரலாறு போன்ற துறைகளின் பட்டதாரிகளை விட இருமடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அதாவது மற்ற துறைகளை விட ஐடி துறையில் வேலை இழப்பு (அமெரிக்கர்களுக்கு) என்பது அமெரிக்காவில் இருமடங்காக உள்ளதாம்.

தேனியில் குளித்துவிட்டு தலையை காயவைக்க மாடிக்கு போன சஷ்மிதா.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்
H-1B ஒப்புதல்கள் - அமெரிக்க ஊழியர்கள் பணிநீக்கம் புள்ளி விவரம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம், அமெரிக்க ஊழியர்களை பல நிறுவனங்கள் பணி நீக்கம் செய்திருப்பதாகவும், H-1B விசா ஒப்புதல்களை அதிகமாக வாங்கி வெளிநாட்டு ஊழியர்களை சேர்ப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. ஒரு பெரிய ஐடி நிறுவனம் 2025 நிதியாண்டில் 5,189 H-1B விசாக்களுக்கு ஒப்புதல் பெற்ற அதே நேரத்தில், சுமார் 16,000 அமெரிக்க ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி உள்ளதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

பணி நீக்கம் அதிகம்

இதேபோல் மற்றொரு புகழ்பெற்ற நிறுவனம் 1,698 விசா ஒப்புதல்கள் பெற்றிருந்த நிலையில், ஓரிகானில் 2,400 அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. இன்னொரு நிறுவனம் 2022 முதல் தனது அமெரிக்கப் பணியாளர்களின் எண்ணிக்கையை 27,000 அமெரிக்க ஊழியர்களை குறைத்துக்கொண்ட நிலையில், 25,075 H-1B விசா ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாம். இதேபோல் நான்காவதாக ஒரு நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 1,000 அமெரிக்கர்களுக்கான வேலைகளைக் குறைத்துவிட்டு, 1,137 H-1B விசா ஒப்புதல்களை பெற்றுள்ளதாம்.

அமெரிக்கா விளக்கம்

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் 2% முதல் 5% வரை சரிந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவு குறித்து அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னி கூறுகையில், ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் அளித்திருக்கினற்ன. நாங்கள் அவர்களிடம் இது தொடர்பாக விரிவாக கலந்து ஆலோசித்திருக்கிறோம்.

அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளியுங்கள்

அமெரிக்கர்களின் வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறினோம். யாருக்காவது ஐடி நிறுவனங்கள் வேலைக்கான பயிற்சி அளிக்க வேண்டுமென்றால், அமெரிக்காவின் சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+