நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்டார்டிக்காவில் மறைந்த சூரியன்! விண்ணில் நடந்த போர்! 2022ன் மாஸ் விண்வெளி நிகழ்வுகள்! நடந்தது என்ன

Google Oneindia Tamil News

நியூயார்க்: கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து பிரபஞ்சம், அண்டம் என விண்வெளி மீது மக்களுக்கு தீராத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஜேம்ஸ் வெப் விண்வெளிக்கு சென்றது என்னவோ 2021 டிசம்பராக இருக்கலாம். ஆனால் அது எடுத்த முதல் புகைப்படம் 2022ம் ஆண்டில்தான். அந்த வகையில் ஜேம்ஸ் வெப் முதல் ஆர்டிமிஸ் திட்டம் வரை வானியல் நிகழ்வுகள் 2022 எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

குவாட்ரான்டிட்ஸ் விண்கற்கள் மழை: ஜனவரி 3ம் தேதி இரவு தொடங்கி 4ம் தேதி அதிகாலை வரை இந்த விண்கல் மழை பொழிந்தது. கடந்த 2003ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2003 EH1 எனும் வால் நட்சத்திரத்தின் தூசிகள்தான் இவ்வாறு விண்கற்கள் மழையாக பொழிந்தது. இந்த ஆண்டின் தொடக்கமே இதன் மூலம் கலர்ஃபுல்லா அமைந்துவிட்டது.

இப்போ வங்கதேசத்துக்கிட்ட கூட தோற்கிறோமா? இந்திய அணிக்கு இப்போ வங்கதேசத்துக்கிட்ட கூட தோற்கிறோமா? இந்திய அணிக்கு

புதன்

புதன்

கண்ணில் பட்ட புதன்: சூரிய குடும்பத்தில் பூமிக்கு அருகில் உள்ள கோள்களில் கண்ணில் சிக்காமல் கண்ணாம்பூச்சி ஆடும் ஒரே கிரகம் புதன்தான். ஏனெனில், இதனுடைய சுற்றுவட்ட பாதை மிகவும் சிறியது என்பதால் சீக்கிரமாக சூரியனை சுற்றி வந்துவிடும். அதானல்தான் என்னவோ பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்கிறார்கள் போல. ஆனால் கடந்த ஜனவரி 7ம் தேதி பூமிக்கு எதிர் திசையில் இந்த கிரகம் வந்தது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.

உயிர் வாழ தகுதியான கோள்: பிப்ரவரி 13ம் தேதியன்று பூமியிலிருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள கோள் ஒன்று உயிர்கள் வாழ தகுதி கொண்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

சாதனை புரிந்த அரசு பள்ளி மாணவர்கள்: கோவையின் ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவிகளான பிரமீஷா மற்றும் ஸ்வேதா என இரண்டு மாணவிகள் குறுங்கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். நாசா இதனை அங்கீகரித்து அவர்களுக்கு சான்றிதழை வழங்கியது.

விண்கல்

விண்கல்

லிரிட்ஸ் விண்கற்கள் மழை: கடந்த 1861ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான் C/1861 G1 தாட்சர் எனும் வால்நட்சத்திரம். இந்த நட்சத்திரம் சூரியனை நோக்கி வந்தபோது விட்டுச் சென்ற தூசிகளின் அருகில் பூமி சென்றதால் ஈர்ப்பு விசை காரணமாக தூசி துகள் பூமியின் மீது விழுந்தன. இது ஏப்ரல் மாதம் 16-25 விண்கற்கள் மழையாக தெரிந்தது.

முதல் சூரிய கிரகணம்: 2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 அன்று ஏற்பட்டது. ஆனால் இது முழு சூரிய கிரகணம் அன்று. 53% அளவு சூரியனை இந்த கிரகத்தின் போது நிலவு மறைத்திருந்தது.

எட்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழை: மிகவும் பிரபலமான ஹேலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி துகள்கள் கடந்த மே 6ம் தேதி இரவு அற்புதமான விண்கற்கள் மழையை ஏற்படுத்தியது.

பிரமாண்ட கருந்துளை: நமது பால்வெளி மண்டலத்தில் நமது சூரியனை விட 40 லட்சம் மடங்கு பெரிய சாகிட்டாரியஸ் ஏ எனப்படும் கருந்துளையை ஈவென்ட் ஹொரைசான் டெலஸ்கோப் கூட்டமைப்பு (Event Horizon Telescope, EHT) எடுத்திருந்தது.

நிலவில் அதிசயம்

நிலவில் அதிசயம்

நிலவில் விவசாயம்: நிலவு மண்ணில் நாசா விஞ்ஞானிகள் பயிரிட்ட செடியானது இரண்டே நாட்களில் வளர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல் சந்திர கிரகணம்: மே 16ம் தேதி முதல் சந்திர கிரகணம் தோன்றியது. ஆனால் இது இந்தியாவில் பெரிய அளவில் தெரியவில்லை.

அண்டார்டிக்காவில் மறைந்த சூரியன்: மே மாதம் 17ம் தேதி இந்த ஆண்டின் முதன் முறையாக அண்டார்டிக்காவில் சூரியன் மறைந்ததது. இதற்கடுத்து மீண்டும் சூரியன் மறைய 4 மாதங்கள் ஆகும் நிலையில், தொடர் இருட்டில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது குறித்து நாசா தனது ஆய்வை தொடங்கியது.

ஜேம்ஸ் வெப் மீது மோதிய விண்கல்: நீண்ட உழைப்புக்கு பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் மீது ஜூன் 9ம் தேதி மிகச்சிறிய விண்கல் ஒன்று மோதி சிறிய சேதத்தை ஏற்படுத்தியது.

விண்வெளி மையத்திலிருந்து வீடியோ வெளியிட்ட சமந்தா: ஜூன் 13ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி
எனும் விண்வெளி வீராங்கனை டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிக்டாக வீடியோ வெளியிட்ட முதல் பெண்மணி இவர்தான்.

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

மாதவனின் பஞ்சாங்கம்: தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் எனும் திரைப்படம் குறித்து ஜூன் 29ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "செவ்வாய் கிரகத்தை செயற்கைக்கோள் சுற்றிக்கொண்டிருக்க பஞ்சாங்கம்தான் காரணம்" என்று கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பேரண்ட குழந்தை: நமது பேரண்டம் உருவாகி 1,380 கோடி ஆண்டுகள் ஆன நிலையில், அது 60 கோடி ஆண்டுகளில் எப்படி இருந்தது என்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படமெடுத்து அனுப்பியது. இதுதான் பேரண்டத்தின் குழந்தை புகைப்படமாகும்.

சூப்பர் மூன்: ஜூலை 13ம் தேதியன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. இதனால் இயல்பை விட பெரியதாக தெரிந்தது. இதனை சூப்பர் மூன் என்று அழைப்பார்கள்.

புதிய படங்கள்: ஜூலை 13 அன்னு ஜேம்ஸ் வெப் தனது வேலையை மெல்ல தொடங்கியது. பல்வேறு நட்சத்திரங்கள் உருவானபோது எப்படி இருந்தது என்பது குறித்த சில புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

போர்

போர்

விண்வெளியில் எதிரொலித்த போர்: ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததையடுத்து சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது.

விண்வெளியில் உயிர்கள்: விண்வெளியில் கார்பன்டை ஆக்ஸைடு இருப்பதை முதன் முறையாக ஆகஸ்ட் 28ம் தேதி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்தது. இதன் மூலம் விண்வெளியில் உயிர்கள் இருப்பதற்கான ஆய்வுகள் தீவிரமடைந்தன.

ஆர்டெமிஸ் தடங்கல்: ஆகஸ்ட் 29ம் தேதியன்று ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக ராக்கெட் ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

புறக்கோள்: சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள புறக்கோள் ஒன்றை ஜேம்ஸ் வெப் புகைப்படம் எடுத்தது. இது ஒரு வாயுக்கோள் என்றும் இதில் உயிர்கள் வாழ முடியாது எனவும் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

விருது

விருது

வால்நட்சத்திரத்திற்கு விருது: Leonard எனப்படும் வால்நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்த சீனாவை சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு லண்டனின் Royal Observatory Greenwich எனும் விண்வெளி ஆய்வு நிறுவனம் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது. இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டதால் இனி எப்போது மீண்டும் திரும்ப வரும் என தெரியாது.

பூமிக்கு அருகில் வந்த பெரிய அண்ணன்: செப்டம்பர் 26ம் தேதியன்று பூமிக்கு அருகில் வியாழன் கோள் வந்திருந்தது. இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

விண்கல்லை மோதிய செயற்கைக்கோள்: செப்டம்பர் 27ம் தேதி டிமார்போஸ் எனும் சிறிய விண்கல்லை நாசாவின் டார்ட் எனும் செயற்கைக்கோள் வேண்டுமென்றே மோதி அதன் திசையை மாற்றியது. விண்வெளியிலிருந்து பூமியை தாக்கும் விண்கற்களை திசை மாற்றி பூமியை காக்க முடியுமா? என நாசா ஆய்வு செய்தது. ஆய்வின் ஒரு பகுதியாக இந்த சோதனையை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.

மங்கள்யான்

மங்கள்யான்

தொடர்பை இழந்த மங்கள்யான்: 2013ம் ஆண்டு ஏவப்பட்டு 2014ம் ஆண்டு செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இஸ்ரோவின் மங்கள்யான் செயற்கைக்கோள் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததன் காரணமாக பூமியுடனான தொடர்பை அக்டோபர் மாதம் 3ம் தேதி துண்டித்துக்கொண்டது.

விண்வெளிக்கு சென்ற பூர்வ குடியின பெண்: அமெரிக்கா 1776ம் ஆண்டு சுதந்திரம் அடைந்திருந்தாலும், 1958ம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கான பயணத்தை தொடங்கி இருந்தாலும் அந்நாட்டிலிருந்து பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதிதான் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிக்கோல் மான் என்பதுதான் அவரது பெயர்.

கடைசி சூரிய கிரகணம்: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 25ம் தேதி தெரிந்தது.

கடைசி சந்திர கிரகணம்: இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி தெரிந்தது.

ஆர்டெமிஸ்: ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் முயற்சி இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், நவம்பர் 16ம் தேதியன்று ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தனியார் ராக்கெட்: விண்வெளி துறையில் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 16ம் தேதியன்று முதன் முதலாக தனியார் ராக்கெட் ஒன்று விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

English summary
Ever since the James Webb Space Telescope was launched at the end of 2021, people have had an insatiable interest in the universe and space. December 2021 may be when James Webb goes into space. But the first photo it took was in 2022. In that sense, from James Webb to the Artemis project, astronomical events 2022 are compiled here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X