Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மணி நேரம்தான் வேலை.. ஆனா ஒரு கோடி ரூபாய் சம்பளம்! கூகுள் ஊழியரின் வாழ்க்கையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் என்ஜினியர் ஒருவர் தன்னுடைய பணி சூழல் குறித்து பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தான் வேலை செய்வதாகவும், ஆனால் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குவதாகவும் கூறியுள்ளார். இவர் கூறியுள்ள விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது.

வேலை வாய்ப்பு என்பது ஒவ்வொரு நாளும் மிகவும் சவாலானதாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. மாறாக இருக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து சுருங்கி வருகின்றன. எனவே வேலை கேட்டும், கிடைக்கும் வேலைகள் சமூக பாதுகாப்பானதாக, நிரந்தமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

A Google employee who works for an hour a day and gets paid in crores

இப்படி இருக்கையில், ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதம் ரூ.10 லட்சம் என ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ரூபாயை ஒருவர் சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்யும் டெவோன் எனும் நபர்தான் இவ்வளவு சம்பளத்தை வாங்குகிறார். பொதுவாக கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு சாப்ட்வேர் இன்ஜினியரிங் கனவாக இருக்கும்.

ஏனெனில் சம்பளம், உணவு, மருத்துவம், விடுமுறை என பல்வேறு சலுகைகள் கூகுளில் சிறப்பானதாக கிடைக்கும் என்பதால்தான். இந்நிலையில், கூகுளில் வேலை செய்பவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஃபார்ச்சூன் இதழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் டெவோன் எனும் புனைபெயர் கொண்ட கூகுள் ஊழியரிடம் சில கேள்விகளை கேட்கையில்தான் மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பணி சூழல் குறித்து அவர் கூறுகையில்,

"நான் என்னுடைய 20வது வயதில் கூகுளில் வேலைக்கு சேர்ந்தேன். வழக்கமாக காலை 9 மணிக்கு எழுந்துக்கொள்கிறேன். அதன் பின்னர் 11 மணி வரை குளித்து முடித்து எனக்கான உணவை தயாரிக்கிறேன். அதன் பின்னர் வேலையில் அமர்கிறேன். பொதுவாக மதியம் வரை வேலை செய்வேன். மீதமுள்ள நேரங்களில் என்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காக உழைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இவர் ஓரு வாரத்திற்கு மொத்தமாக 5 மணி நேரம்தான் வேலை செய்வதாக இவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியெனில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம்.

இவர் சொல்வது சரியா? என்பதை கண்டுபிடிக்க ஃபார்ச்சூன், இவரது கூகுள் ஆஃபர் லெட்டரையும், இவரது சம்பளத்தையும் செக் செய்து பார்த்திருக்கிறது. அதில் டெவோன் சொன்னது எல்லாம் சரியாக இருந்திருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் டெவோன் போன்ற பணி சூழல் இருக்கவில்லை. சிலர் தங்களது ஊதியத்திற்காக கடுமையாக உழைக்கின்றனர். இவரை போலவே மற்றொரு சாப்ட்வேர் இன்ஜினியர் ஜேசன் கூறுகையில், "எனக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. ஒருவேளை என்னால் இதை தாங்க முடியவில்லை என்றால், வேலையை நான் இழக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறைந்த நேரம் வேலை செய்து அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் டெவோனின் பேட்டி இந்த கூற்றை மேலும் உறுதி செய்வதை போல அமைந்திருக்கிறது. ஒருபுறம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வாங்கும் டெவோன் போன்றோர் கூகுள், மெட்டா போன்ற நிறுவனத்தில் இருக்கையில் மறுபுறம், ஜேசன் போன்றோர் வேலையை விட்டு துரத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான கூகுள், மெட்டா ஊழியர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+