மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்.. கோபத்தை வெளிப்படுத்தினேன்! புடினிடம் சீறும் பிடன்.. கடும் மோதல்!
நியூயார்க்: ரஷ்ய அதிபர் புடினிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பிடன் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய அரசாங்கம் பற்றிய தன்னுடைய கருத்துக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க முடியாது என்று பிடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. போர் ஒரு மாதம் கடந்த நிலையில் இதுவரை போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இரண்டு நாடுகளும் இன்று மீண்டும் மூன்றாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை துருக்கியில் நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்த கருத்து ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிடன் என்ன சொன்னார்
அமெரிக்க அதிபர் பிடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போலந்து அதிபர் மாளிகையில் பேசிய போது, நேட்டோவில் சிறிய கல்லை கூட நகர்த்த வேண்டும் என்று ரஷ்யா நினைக்க கூடாது. நேட்டோ படையின் ஒரு பிடி மண்ணை கூட ரஷ்யாவால் பிடிக்க முடியாது. இந்த போரில் ஏற்கனவே ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. திட்டமிடல் ரீதியாக இந்த போர் ரஷ்யாவிற்கு தோல்வியை மட்டுமே கொடுத்துள்ளது. ரஷ்ய மக்கள் எங்களின் எதிரிகள் கிடையாது. ஆனால் கடவுளே புடின் இனியும் அதிகாரத்தில் இருக்க கூடாது. புடின் ஒரு கொலைகார கசாப்பு கடைக்காரர் போல செயல்படுகிறார் என்று பிடன் விமர்சனம் செய்து இருந்தார்.

விளக்கம்
ரஷ்ய ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தொனியில் பிடன் பேசியது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் பிடன் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் என்னுடைய தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்தி உள்ளேன். நான் என்னுடைய கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன். நான் சொன்னதை மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்
தெளிவாக விளக்குகிறேன். ரஷ்யா நாட்டின் உள்நாட்டு அரசியலில் நாங்கள் இதற்கு முன் தலையிட்டது இல்லை. இணையும் தலையிட மாட்டோம். எனக்கு தனிப்பட்ட வகையில் தோன்றிய கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தினேன். நான் என்னுடைய பர்சனல் கோபத்திற்காக நான் எந்த விதமான வருத்தங்களையும், கோபத்தையும் தெரிவிக்க மாட்டேன்.

ரஷ்ய மக்களுக்கானது
நான் சொன்ன கருத்து ரஷ்ய மக்களுக்கானது. நான் என் மனதில் பட்டதை சொன்னேன். புடின் நான் சொன்ன கருத்தை எப்படி எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. அவர் சரியாக யோசிக்கவில்லை. அவர் தான் செய்வது எல்லாம் நியாயம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று அவர் நினைக்கிறார்.

ரஷ்யா பேச்சுவார்த்தை
ரஷ்யாவுடனான ராஜாங்க பேச்சுவார்த்தைகள் இன்னும் திறந்தே இருக்கிறது. அவர் என்ன பேச விரும்புகிறார் என்பதை பொருத்தே ரஷ்யாவுடனான எங்களின் பேச்சுவார்த்தை அமையும், என்று பிடன் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக புடின் அதிகாரத்தில் நீடிக்க கூடாது என்ற பிடனின் கருத்து சர்ச்சையான நிலையில் வெள்ளை மாளிகை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிடன் பேசவில்லை.

புடின் ஆட்சி மாற்றம்
புடின் பற்றி பிடன் பேசியது அவரின் எழுதப்பட்ட உரையில் இல்லை. புடின் மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த கூடாது என்று பொருள்படும் வகையில் மட்டுமே அப்படி பேசினார். ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை, என்று வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஷ்யாவில் என்ன ஆட்சி நடக்க வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள் முடிவு செய்வார்கள்.யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications