X வலைதளத்தை விற்கும் எலான் மஸ்க்.. வாங்குவது யார் தெரியுமா? இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருக்கலாமே
நியூயார்க்: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வலைதள பக்கத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு xAI என்ற பெயரில் செயல்படும் குரோக் ஏஐ நிறுவனம் வாங்க உள்ளது. இந்த நிறுவனமும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது என்பதால் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் எலான் மஸ்க் ஏன் எக்ஸ் பக்கத்தை xAI நிறுவனத்துடன் சேர்க்கிறார் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். தென்ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் அமெரிக்கா குடியுரிமை பெற்று அங்கேயே செட்டி ஆகிவிட்டார். இவர் பல பிசினஸ்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்பட பல தொழில்களை கைவசம் வைத்துள்ளார் எலான் மஸ்க்.

இவர் கடந்த 2002ம் ஆண்டில் ட்விட்டர் என்ற சமூக வலைதள பக்கத்தை வாங்கினார். 44 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து ட்விட்டரை கைப்பற்றினார். அதன்பிறகு ட்விட்டர் பெயரை மாற்றினார். இப்போது ட்விட்டர் வலைதள பக்கம் எக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எக்ஸ் வலைதள பக்கத்தை எலான் மஸ்க் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தை எலான் மஸ்க் xAI என்ற பெயரில் இயங்கும் ஏஐ நிறுவனத்துக்கு விற்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் என்பது grok ஏஐயை உருவாக்கி உள்ளது. சமீபகாலமாக இந்த குரோக் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது. நமக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதுபற்றி எக்ஸ் பக்கத்தில் குரோக்-கை டேக் செய்தால் போதும். அது உடனடியாக தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும் பதில் அளித்து விடும்.
இப்படி grok-யை நிர்வகித்து வரும் xAI நிறுவனத்துக்கு தான் எக்ஸ் பக்கத்தை எலான் மஸ்க் விற்பதாக அறிவித்துள்ளார். மேலும் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால் இந்த xAI என்பதும் எலான் மஸ்க்கின் நிறுவனம் தான். ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு துறையில் தனது பங்களிப்பை வழங்கும் வகையில் எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை கடந்த 2023ம் ஆண்டில் உருவாக்கினார்.
இந்த xAI-யின் இப்போதைய சந்தை மதிப்பு என்பது 81 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. எக்ஸ் வலைதள பக்கத்தின் சந்தை மதிப்பு என்பது 33 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதனால் xAI ஏஐ நிறுவனத்துக்கு எக்ஸ் வலைதள பக்கத்தை எலான் மஸ்க் ரூ.33 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.2.82 லட்சம் கோடி)விற்பனை செய்துள்ளார். xAI நிறுவனத்துடன் எக்ஸ் பக்கத்தை செயல்படுத்தும்போது மக்களுக்கான சேவையை இன்னும் துல்லியமாக வழங்கலாம் என்ற நோக்கத்தில் எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications