• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட் தந்த சீனா! ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மீது பொருளாதார தடை! ஐநாவில் முடிவு! பாக்கிற்கு சிக்கல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அப்துல் ரவூப் மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

  Pakistanஐ தப்பிக்க வைக்கும்China| UN Security Councilலில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்China *World

  இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரவூப்-ஐ சர்வதேச தீவிரவாதியாக அடையாளப்படுத்தியுள்ளன. இந்த தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பின.

  இந்நிலையில், இது குறித்து 15 நாடுகள் உள்ளடக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது சீனாவை தவிர அனைத்து நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டன.

   மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் 7ஆம் ஆண்டு நினைவுதினம் - ட்விட்டரில் தலைவர்கள் அஞ்சலி மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் 7ஆம் ஆண்டு நினைவுதினம் - ட்விட்டரில் தலைவர்கள் அஞ்சலி

   குற்றச்சாட்டு

  குற்றச்சாட்டு

  1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கந்தரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சம்பவம், 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் 2016ம் ஆண்டு பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் உட்பட பல பயங்கரவாத செயல்களில் திட்டமிட்டு அப்துல் ரவூப் ஈடுபட்டதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மட்டுமல்லாது, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் அப்துல் ரவூப் பெயர் இடம் பெற்றுள்ளது.

  தீர்மானம்

  தீர்மானம்

  இந்நிலையில், இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கவும், இவரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சீனா தரப்பில் மட்டும் இதை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது. 15 நாடுகள் இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் ஐந்து நாடுகளிடம் வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் எந்த ஒரு தீர்மானத்தையும் ரத்து செய்யும் உரிமையை கொண்டுள்ளது. இந்த பின்னணியில்தான் தற்போது மேற்குறிப்பிட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  குற்றசாட்டு

  குற்றசாட்டு

  "இந்த வழக்கு குறித்து ஆய்வு செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதால் மேற்குறிப்பிட்ட முடிவை சீனா மேற்கொண்டுள்ளது" என ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், கமிட்டியின் வழிகாட்டுதல் படியே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதேபோல பல முடிவுகள் கமிட்டி நிறுத்தி வைத்திருப்பதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொருத்த அளவில், அப்துல் ரவூப் பல பாகிஸ்தனியர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியுள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

  முடிவு

  முடிவு

  அதேபோல இவர் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த வழிவகுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த 2010 முதல் அந்நாடு அப்துல் ரவூப் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், "பயங்கரவாதிகள் குறித்த இப்படியான தீர்மானங்களை எந்த நியாயமான காரணங்களும் கூறாமல் இவ்வாறு நிறுத்தி வைக்கும் நடைமுறைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

  நம்பிக்கை

  நம்பிக்கை

  பயங்கரவாதச் செயல்களால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து நடைபெற்ற UNSC விவாதத்தின் போது, ​​ருசிரா காம்போஜ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். மேலும், "உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகள் குறித்து ஆதார அடிப்படையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு தீர்மானம் முன்மொழியப்பட்டால் அது நிறுத்தி வைக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. இந்தியா பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. தற்போதும் அதை இன்னும் உறுதியுடன் எதிர்கொள்வதை கற்றுக்கொண்டுள்ளது" என்றும் அவர் கூறியிருந்தார்.

  முதல்முறையல்ல

  முதல்முறையல்ல

  சீனா இவ்வாறு பயங்கரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறுத்தி வைப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த ஜூன் மாதம் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி மீது தடை விதிக்கும் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்தது. இது குறித்து இந்தியா அப்போது சீனாவை கடுமையாக சாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, "மனித குலத்திற்கு ஏற்படும் இந்த அச்சுறுத்தலை பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ருசிரா காம்போஜ் கூறினார்.

  English summary
  (பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானத்தை நிறுத்தி வைத்த சீனா): India and the US wanted Abdul Rauf Azhar to be designated as an international terrorist and be subjected to a global travel ban and freezing of his assets.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X