நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. அமெரிக்காவில் மேடை ஏறி மர்மநபர் வெறிச்செயல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் பிறந்து புக்கர் பரிசு பெற்றவரும், இஸ்லாமியத்துக்கு எதிரான விஷயங்களோடு நூல் எழுதி சர்ச்சைக்கு பெயர் பெற்றவருமான பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென்று மேடை ஏறிய நபர் அவரை கத்தியால் குத்தினார்.

Recommended Video

    யார் இந்த Salman Rushdie? அவருக்கு என்ன நடந்தது? The Satanic Verses காரணமா? | *World

    இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சல்மானர் ருஷ்டி. இவருக்கு 75 வயது நிரம்பிய நிலையில் பிரபல எழுத்தாளராக உள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இவர் எழுதிய "மிட்நைட்ஸ் சில்ட்ரன்" எனும் நாவல் மிகவும் பிரபலமானது. இதற்காக சல்மான் ருஷ்டிக்கு புக்கர் பரிசு கிடைத்தது. இதையடுத்து அவர் Satanic Verses எனும் நூல் எழுதினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

     ஊழல் வழக்கில் சேம்சங் துணைதலைவர்.. 'பொது மன்னிப்பு வழங்கிய தென்கொரியா'.. இனி பொறுப்புகளை பார்க்கலாம் ஊழல் வழக்கில் சேம்சங் துணைதலைவர்.. 'பொது மன்னிப்பு வழங்கிய தென்கொரியா'.. இனி பொறுப்புகளை பார்க்கலாம்

    சர்ச்சையை கிளப்பிய நூல்

    சர்ச்சையை கிளப்பிய நூல்

    அதாவது Satanic Verses எனும் நூலில் இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு இஸ்லாமிய நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சல்மான் ருஷ்டிக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன. மேலும் அவருக்கு தீவிரவாதிகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

    அமெரிக்காவில் நிகழ்ச்சி

    அமெரிக்காவில் நிகழ்ச்சி

    இதையடுத்து அவர் அடிக்கடி ஒவ்வொரு நாடுகளுக்கு செல்வதும், அங்கு பதுங்கி வாழ்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அவர் செல்லும் நாடுகளில் தனக்கான பாதுகாப்பையும் அவர் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் ஒருவர் இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார்.

    மேடையிலேயே கத்திக்குத்து

    மேடையிலேயே கத்திக்குத்து

    இந்நிலையில் திடீரென்று மேடை ஏறிய மர்மநபர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தினார். அதாவது சல்மான் ருஷ்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக அவரை கத்தியால் குத்தினார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்பு நடந்தது என்ன?

    முன்பு நடந்தது என்ன?

    சல்மான் ருஷ்டி எழுதிய Satanic Verses நூலில் இஸ்லாமியத்துக்கு எதிரான சில விஷயங்கள் இருந்தது. இந்த நூல் ஈரானில் தடை செய்யப்பட்டாலும் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் இருந்து வந்தது. இதனால் அவருக்கு பாதுகாப்புகள் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து மிரட்டல் இருந்து வந்தது. இதற்கிடைய தான் Satanic Verses நூலை ஜப்பானில் மொழிப்பெயர்த்தவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் தற்போது சல்மான் ருஷ்டியை மர்மநபர் கத்தியால் குத்தியுள்ளார்.

    English summary
    Salman Rushdie, an Indian-born Booker Prize-winning author known for his controversial anti-Islamic writings, has been stabbed in the United States. He was stabbed by a man who suddenly came on stage at a show he was participating in.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X