நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரித்தபடியே.. ஐரோப்பா மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. உலக சுகாதார மையம் தகவல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைந்து வந்தாலும் ஐரோப்பா மண்டலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஆசியா, ஐரோப்பாவில் உள்ள 53 நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக உலக சுகாதார மையம் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தது. வரும் வாரங்களில் இந்த நாடுகளில் புதிய கொரோனா அலை தோன்ற வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது.

கடந்த வாரங்களில் ஐரோப்பாவில் மட்டும் கேஸ்கள் பரவும் வீதம் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது.

 'டெக் சம்பவங்கள் 2' பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிரடி முடிவு; கூகுளுக்கு 20000 கோடி அபராதம் உறுதி! 'டெக் சம்பவங்கள் 2' பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிரடி முடிவு; கூகுளுக்கு 20000 கோடி அபராதம் உறுதி!

உலக சுகாதார மையம்

உலக சுகாதார மையம்

இந்த நிலையில்தான் எச்சரிக்கை விடுத்தபடியே உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைந்து வந்தாலும் ஐரோப்பா மண்டலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடங்கி மத்திய ஆசிய வரை இருக்கும் நாடுகளை ஐரோப்பா மண்டலமாக உலக சுகாதார மையம் வரையறுக்கிறது. இங்கு உள்ள நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன.

உலகம் முழுக்க எப்படி

உலகம் முழுக்க எப்படி

உலகம் முழுக்க கடந்த வாரம் புதிய கேஸ்களில் 4 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க இதனால் 42 சதவிகித நாடுகளில் புதிய கேஸ்கள் அதிகரித்துள்ளன. 58 சதவிகித நாடுகளில் புதிய கேஸ்கள் குறைந்துள்ளது. 58 சதவிகித நாடுகளில் புதிய கேஸ்கள் 4 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பா மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா மரணங்கள் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் உலகம் முழுக்க 3.1 சதவிகித கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதில் 1.9 மில்லியன் கேஸ்கள் கடந்த வாரம் ஐரோப்பா மண்டலத்தில் இருந்து மட்டும் பதிவாகி உள்ளது. ரஷ்யா, பிரிட்டன், துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

யு.கேவில் 1,563,641 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. ரஷ்யாவில் 1,007,098 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. துருக்கியில் 449,080 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. பிரேசிலில் 183,895 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. பிரான்சில் 135,834 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

அமெரிக்கா

அமெரிக்கா

மாறாக அமெரிக்காவில் இந்த வாரம் கேஸ்கள் அதிகரித்தாலும் கடந்த வாரம் தினசரி கேஸ்களில் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. மரணங்கள் 14 சதவிகிதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் 9,165,878 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 780,102 மரணங்கள் பலியாகி உள்ளன.

English summary
New COVID 19 cases are increasing in Europe as warned says WHO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X