"டேஞ்சரஸ் கொரோனா வகை".. சக்தி வாய்ந்த புது வேரியண்ட்கள் தோன்றலாம்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை
நியூயார்க்: கொரோனா வைரஸ் கேஸ்கள் உலகம் முழுக்க பல நாடுகளில் அதிகரித்து வருவதால், புதிய மோசமான உருமாறிய கொரோனா வகைகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் எதுவும் முடியவில்லை என்று உலக சுகாதார மையம் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இங்கிலாந்து, இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் புதிய அலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக டெல்டா வகை கொரோனா காரணமாக அதிக கேஸ்கள் ஏற்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தினமும் 540,000+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.

உலக சுகாதார மையம்
இந்த நிலையில் உலகம் முழுக்க கேஸ்கள் அதிகரிப்பது குறித்து உலக சுகாதார மையம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. இந்த பெருந்தொற்று இன்னும் முடிவிற்கு வரவில்லை. மீண்டும் உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்பு
அதோடு மிக மோசமான, உருமாறிய கொரோனா கேஸ்கள் இதனால் தோன்றும் வாய்ப்புகளும் உள்ளன. இப்போது இருப்பதை விட மோசமான, அதிக கவலைதரக்கூடிய, கொரோனா வகைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்த உருமாறிய புதிய வகைகள் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட போகும் வாய்ப்புகள் உள்ளன.

சவால்
அதிக சவாலான கொரோனா வகைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. தீவிரமான லாக்டவுனுக்கு பின்பும் அங்கு கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

கேஸ்கள் உயர்கிறது
ஒரே வாரத்தில் ஆப்ரிக்காவில் 43% புதிய கேஸ்கள் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க நடுக்கும் விளையாட்டு போட்டிகள், மக்கள் வெளியே செல்வது, நிகழ்ச்சிகள், தேர்தல்கள், மத நிகழ்வுகள் ஆகியவை கொரோனா பரவலை அதிகரிக்கிறது.

பல நாடுகள்
பல நாடுகளில் தளர்வுகள் கொண்டு வந்துள்ளனர். இதுவும் கேஸ்களை உயர்த்தி வருகிறது. இது கண்டிப்பாக புதிய வகை கொரோனாவை உருவாக்கும் அச்சம் உள்ளது என்று, உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications