Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்!

பாயும் புலி பதுங்கும் நாகம் படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான ஹாலிவுட் நடிகர் சோ உன் ஃபேட் தன்னுடைய சொத்துக்களில் 4000 கோடி ரூபாயை மக்களுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரூ.4000 கோடியை மக்களுக்கு தானமாக வழங்கிய நடிகர்- வீடியோ

    நியூயார்க்: பாயும் புலி பதுங்கும் நாகம் படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமான ஹாலிவுட் நடிகர் சோ உன் ஃபேட் தன்னுடைய சொத்துக்களில் 4000 கோடி ரூபாயை மக்களுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.

    கடந்த 2000ம் ஆண்டு உலகம் முழுக்க Crouching Tiger, Hidden Dragon படம் வெளியானது. தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்ற பெயரில் வெளியான இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. டைட்டானிக் படத்திற்கு நிகராக இந்த படம் பெரிய ஹிட் அடித்தது.

    இந்த படத்தின் ஹீரோவான சோ உன் ஃபேட் உலகம் முழுக்க அதன்பின் வைரலானார். இந்த நிலையில் இவர் செய்த காரியம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

    ஹாங்காங் படம்

    ஹாங்காங் படம்

    இவர் ஹாலிவுட் நடிகர் என்றாலும் ஹாங்காங்கில்தான் பிறந்து வளர்ந்தார். அதேபோல் இவர் சீன படங்களிலும் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் போன்ற புகழ் பெற்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

    சொத்து

    சொத்து

    இந்த நிலையில் கடந்த 2015ம் வருடம் இவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் 24வது மிகப்பெரிய நடிகர் இவர்தான்.

    தானமாக எழுதிக் கொடுத்தார்

    தானமாக எழுதிக் கொடுத்தார்

    இந்த நிலையில் இவர் தன்னுடைய சொத்துக்களை தற்போது பொது மக்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். தன்னுடைய சொத்துக்களில் 4000 கோடி ரூபாயை அவர் தானமாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். இவர் இறந்த பின் அந்த பணம் மக்களுக்கு சென்றுவிடும்.

    என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    இதுகுறித்து கருத்து தெரிவித்த சோ உன் ஃபேட் ''பணத்தை இறந்த பின் நாம் எங்கும் கொண்டு செல்ல முடியாது. நாம் இறந்த பின் நம்முடைய பொருட்கள் பிறருக்கு செல்ல வேண்டும். மேல் உலகத்தில் எங்கும் வங்கிகள் கிடையாது. இது மக்களிடம் சென்று சேர்வதே சரியானது'' என்று கூறி எல்லோரையும் நெகிழ வைத்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+