Deepseek பஞ்சாயத்து! தகவல்களை திருடி சீன அரசிடம் கொடுக்கிறதா? சோஷியல் மீடியாவில் பரவும் சர்ச்சை
நியூயார்க்: அமெரிக்காவில், ஏஐ தொழில் நுட்ப செயலிகள் வரிசையில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக 'டீப்சீக்' (Deepseek) இருக்கிறது. ஆனால் இந்த செயலி, அமெரிக்கர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு விற்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகமே இப்போது AI தொழில்நுட்பத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு ஏடிஎம் போய் கார்டை சொருகி, நம்பரை தட்டினால் பணம் வரும். இது சாதாரண தொழில்நுட்பம். அதுவே, நீங்கள் கார்டை சொருகி குறிப்பிட்ட நேரம் வரை எந்த நம்பரையும் தட்டவில்லையெனில், ஏடிஎம் மெஷின் கார்டை வெளியில் தள்ளிவிடும். இது AI தொழில்நுட்பம். அதாவது வாடிக்கையாளரின் நிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவதுதான் AI தொழில்நுட்பம். ஏடிஎம் என்பது சாதாரண உதாரணம்தான்.

நவீன தொழில்நுட்ப துறையில் AI, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கூகுளுக்கு மாற்றாக அதிக அளவில் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கட்டுரை வேணுமா? இருக்கு. உங்க போட்டோவை டிசைன் செய்து தரனுமா? வசதி இருக்கு. ரெசியூம் ரெடி பண்ணுமா? பாட்டு வேணுமா? தகவல்கள் வேணுமா? புரோகிராம் வேணுமா? எல்லாமே இங்க இருக்கு.
முதலில் Chat GPT மொபைல் செயலியாக AI தொழில்நுட்பத்தை வெளியிட்டிருந்தது. தற்போது அதற்கு போட்டியாக Gemini,Character.ai, Microsoft Copilot, Grammarly, Tutor AI என ஏராளமான AI தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் சீனாவை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியதுதான் Deepseek. மேற்குறிப்பிட்ட அனைத்து AI தொழில்நுட்பங்களும் வழங்கும் வசதிகளை இந்த Deepseek, இலவசமாக வழங்கி வருகிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த Deepseek செயலியை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். Chat GPT இந்த அளவுக்கு டவுன்லோடு செய்யப்படவில்லை.
இப்படி இருக்கையில் இந்த Deepseek, அமெரிக்கர்களின் தகவல்களை திருடி, சீன அரசுக்கு விற்பதாக பேச்சுகள் அடிப்பட்டிருக்கிறது.
உண்மையில் இதுபோன்ற செயலிகள் தகவல்களை திருடுமா? என்று கேட்டால் அதற்கு பெரும்பாலும் ஆம் என்றே பதில்கள் கிடைக்கின்றன. அதாவது, கூகுளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதை பயன்படுத்தும்போது உங்களின் தேடுதல் தகவல்கள்(search history), இருப்பிட தகவல்கள்(location data), தனிப்பட்ட விருப்பங்கள் (personal preferences) ஆகியவை குறித்த தகவல்கள் சேமிக்கப்படுகிறது.
மட்டுமல்லாது கூகுள் மேப், ஜி மெயில், யூடியூப் உள்ளிட்டவற்றில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதை கூகுள் தெரிந்து வைத்துக்கொண்டு, அதை பயன்படுத்துகிறது என புகார்கள் இருக்கின்றன.
கூகுளே இப்படி இருக்கும்போது மற்ற செயலிகள் இப்படி இருக்காதா என்ன? ஆனால் Deepseek இப்படியான தகவல் திருட்டில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் அமெரிக்கர்களில் ஒரு சாரார் இந்த செயலி குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "எங்ககிட்ட ஏற்கெனவே டிக்டாக் அப்படினு ஒரு சீன செயலி இருக்கு. எங்கள் தகவல்கள் திருடப்பட இது ஒன்றே போதும்" என்று சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். மட்டுமல்லாது, அனைத்து சீன செயலிகளும் அந்நாட்டு அரசுடன் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும், எனவே அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பேச தொடங்கியுள்ளனர்.
எது எப்படி இருந்தாலும், ஆன்லைன் என்று வந்துவிட்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications