நான் வெளியேற்றும் முன்.. நீங்களாக வெளியேறிவிடுங்கள்.. டிரம்ப் புதிய பிளான்.. இந்தியர்களுக்கு ஆப்பு?
சென்னை: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை "சுயமாக நாடுகடத்த" அனுமதிக்கும் செயலி ஆகும். அதாவது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்கொள்வதற்கு பதிலாக நீங்கள் சுயமாக நாடு கடத்தப்படலாம். அதாவது இதில் விவரங்களை கொடுத்தால்.. உங்களை கைது செய்யாமல்.. தடுப்பு காவலில் வைக்காமல்.. நாடு கடத்தி மரியாதையுடன் அனுப்புவார்கள்.
அமெரிக்காவிற்கு H1-B visa பெற்று குடியேறிய பலரின் குழந்தைகள் 21 வயதை கடத்த பின் விசா பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் இத்தனை காலம் பெற்றோர்களின் dependents ஆக இருந்தனர். அதாவது சார்பு விசாவில் இருந்தனர்.
தற்போது உள்ள அமெரிக்க விசா விதிப்படி.. 21 வயதாகும் நிலையில் அந்த வாரிசு 2 வருடங்களுக்குள் விசா பெற வேண்டும். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட சில விதிகள் மற்றும் வழக்குகள் காரணமாக இந்த 2 வருட கால அவகாசம் நீக்கப்படலாம் என்கிறார்கள். இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம்.
சுயமாக வெளியேற்றம்
அதாவது 2 வருடத்தில் விசா பெற வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது சுயமாக இவர்கள் வெளியேற வேண்டிய அபாயம் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை "சுயமாக நாடுகடத்த" அனுமதிக்கும் செயலி ஆகும். CBP Home எனப்படும் இந்த US Customs and Border Protection செயலி மூலம் அதிகாரமற்ற குடியேறிகள் தங்கள் விவரங்களை இதில் குறிப்பிடலாம்,
தற்போது உள்ள டேட்டாபடி 1.34 கோடி இந்திய குழந்தைகள் விசா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் 21 வயதை அடையும் நிலையில் உள்ளனர். இதனால் 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா விசா நிராகரிப்பு முடிவு
ஏற்கனவே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபரான அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். இது கோர்ட்டால் தடுக்கப்பட்டு உள்ளது என்றாலும் விரைவில் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால்.. 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.
அதுவரை தானாகவே அந்த விசா செயல்பட தொடங்கி விடும். எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதை 180 நாட்களாக டிரம்ப் குறைத்துள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார்.
கோல்டன் விசா
அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.
மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.
இனி முதலீட்டாளர்கள் விசா கிடையாது?
ஏற்கனவே அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது. இதை EB-5 விசாக்கள் என்று அழைப்பார்கள். EB-5 கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.
இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது. அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications