வர்த்தக போர் தொடங்கியது.. இந்தியா, சீனாவிற்கு இன்று இரவே டிரம்ப் வைக்கும் ஆப்பு! உலக போரை விட ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இரவு 11 மணி முதல் 1 மணி வரை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடுவார். வர்த்தக போர் இதன் மூலம் இன்று தொடங்கும். இந்த வர்த்தக போர் நீண்டதாக.. கொடியதாக இருக்க போகிறது.

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன துறைகள் பாதிக்கப்படும்

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்க உள்ள வரிகள் காரணமாக, இந்தியாவின் ஹெல்த்கேர் ஏற்றுமதி சிஸ்டம்.. அதாவது சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் வருடா வருடம் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதோடு அங்கே பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து ஆகும். தற்போது இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதே சமயம் நம்முடைய ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயங்கள் உள்ளன.

Donald Trumps US Reciprocal tariffs starts against India China and other countries

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார். இந்தியாவில் அவர் முதலீடு செய்ய விரும்ப காரணம் வரி மட்டுமே. அதிக வரி காரணமாக நேரடியாக இந்தியாவில் பேக்ட்ரி கட்ட விரும்புகிறார். இந்தியா அதிகம் வரி போடுகிறது. முக்கியமாக வெளிநாட்டு கார்களுக்கு அதிக இறக்குமதி வரி போடுகிறது. இதற்காக நேரடியாக அங்கே டெஸ்லா உற்பத்தி மையத்தை உருவாக்க மஸ்க் நினைக்கிறார். அது பெரிய தவறு. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல், என்று டிரம்ப் பாய்ந்து உள்ளார்.

ஸ்டீல் உள்ளிட்ட உற்பத்தி துறை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவிற்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம்.

ஐடி துறையும் கூட தப்பிக்காது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.

இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேரடியாக பாதிக்கப்படும் இந்தியா

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேச்சுவார்த்தை

இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக போரை தடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தி வரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க இந்தியா முன் வந்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கான வரியை பாதிக்கு பாதி குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம்.

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகப்போரை விட மோசம்

இந்த வர்த்தக போர் என்பது உலகப்போர் போல ஆயுதங்களை பயன்படுத்தும் போர் அல்ல.. இதனால் நேரடியாக உயிர் இழப்புகள் ஏற்படாது. ஆனால் அதே அளவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுத போர் மூலம் நிர்வாக பிரச்சனை வரும், உலக பொருளாதாரம் சரியும், மக்கள் வேலைகளை இழப்பார்கள், இருக்கிற துறைகள் சரிந்து புதிய துறைகள் உருவாகும், பல வளர்ந்த நாடுகள் சரியும், உலக நாடுகள் இடையே உறவுகள் கசக்கும், உற்பத்தி பாதிக்கும், ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும். இதெல்லாம் ஆயுத போரில் மட்டுமன்றி... டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக போரிலும் நடக்கும் அபாயம் உள்ளது. பக்கவிளைவுகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

டிரம்ப் மேற்கொள்ள உள்ள வர்த்தக போர் எப்படிப்பட்டது?

அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+