சொல்லி அடித்த ‘டியூன் பார்ட் 2’.. 2 ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!
நியூயார்க்: 'Dune: Part Two' திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. டியூன் படத்தின் முதல் பாகம் 6 ஆஸ்கர்களை வென்றிருந்த நிலையில், இரண்டாம் பாகம், 2 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிறந்த அசல் திரைக்கதை பிரிவில் அனோரா மற்றும் தழுவல் திரைக்கதை பிரிவில் கான்க்ளேவ் படங்கள், ஆஸ்கர் விருதுகளை வென்றன. சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் விருதுகளை வென்றது.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை 'THE SUBSTANCE' திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'A Real Pain' படத்திற்காக கீரன் கல்கின் வென்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'EMILIA PEREZ' படத்திற்காக சோ சல்தானா வென்றார்.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக ஷான் பேக்கர் பெற்றுக் கொண்டார். னோரா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் மிக்கி மேடிசன். சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது DUNE பார்ட் 2. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளில் டியூன் திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தது. இந்நிலையில், டியூன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவானது டியூன் 2 திரைப்படம். படத்தின் மிகப்பெரிய பிளஸ் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள். தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் அனைவரையும் ஈர்த்தது. அதோடு பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவும் இருந்ததால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டியூன் என்ற புனைவுக் கதை புத்தகத்தின் அடிப்படையில், பிரமாண்ட பொருட்செலவில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் டியூன். 8000 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக இந்த கதைக்களம் அமைந்திருந்தது. அதில், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அட்ரெய்டீஸ் என்ற பிரிவின் சிற்றரசரின் அபார வளர்ச்சியை கண்டு அச்சம் கொண்ட பேரரசர், அராகிஸ் என்ற மற்றொரு பிரிவின் சிற்றரசரின் உதவியை நாடுகிறார்.
தொடர்ந்து சூழ்ச்சியின் மூலம், அட்ரெய்டீஸ் பிரிவின் மன்னர் கொல்லப்படுகிறார். தப்பி பிழைக்கும் அந்த மன்னனின் மனைவி ஜெஸ்ஸிகா மற்றும் மகன் பால் அட்ரெய்டீஸ், பாலைவன மக்களிடம் தஞ்சமடைகின்றனர். அத்துடன் முதல் பாகம் முடிந்தது. டியூன் படத்தின் முதல் பாகம் எங்கு முடிந்ததோ, அதே காட்சியில் இருந்து இரண்டாம் பாகம் தொடர்ந்தது.
தந்தைக்கு நேர்ந்த துரோகத்திற்காக பழிவாங்க துடிக்கும் பால், பாலைவன மக்களிடம் சேர்ந்து அவர்களில் ஒருவராக மாறி தன்னை பல வகைகளிலும் மெருகேற்றிக் கொள்கிறார். அதோடு, நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியையும் பெறுகிறார். அதன்படி, தனது பழிவாங்கும் எண்ணம் பெரும் போருக்கும், பேரழிவிற்கும் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து, தனது கோபத்தை அடக்கி வைக்கிறார்.
தேநேரம், மறுபுறம் அராகிஸ் மன்னர் பேரரசையே வீழ்த்தி அவரது சிம்மாசனத்தை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொள்கிறார். இதனால் ஏற்படும் அடுத்தடுத்த சம்பவங்கள், போரே வேண்டாம் என இருந்த நாயகன் பாலுக்கு, போரில் களமிறங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. இதில் அவர் வென்றாரா, அதன் மூலம் ஏற்கனவே கணித்தபடி பேரழிவு ஏற்படுகிறதா, தந்தையை கொன்றவரை பழிவாங்கினாரா என்பதே டியூன் பார்ட் 2 படத்தின் மீதிக்கதை.
இப்படத்திலும் வி.எஃப்.எஸ், சவுண்ட் எஃபெக்ஸ் பெரிதும் பேசப்பட்ட நிலையில், இன்று ஆஸ்கர் விருது விழாவில் 2 விருதுகளை வென்றுள்ளது டியூன்: பார்ட் டீ. சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ஸ் (VFX) ஆகிய பிரிவுகளில் டியூன் பார்ட் டூ ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications