Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவருக்கு வந்ததும்.. முதல் வேலை இதுதான்.. எலான் மஸ்க் சபதம்.. அமெரிக்காவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் டிரம்ப் அமைச்சரவைக்கு கீழே அரசாங்கத் திறன் துறை பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக சிஐஏ அமைப்பில் சீர் திருத்தம் செய்ய போவதாக எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

சிஐஏ அமைப்பில் கடந்த வருடங்களாக கணக்கு காட்டப்படுவது உள்ளது. அதாவது துறைக்கு ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி டாலருக்கான கணக்கு காட்டப்படுவதே இல்லை. இந்த நிலையில் டிரம்ப் பதவி ஏற்றதும் முதல் வேலையாக சிஐஏ துறையில் பல மாற்றங்களை செய்ய போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

elon musk us presidential election 2024 kamala harris donald trump 2024

எதிர்பார்த்தபடியே.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக் மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.

அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

அறிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்பின் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு நல்ல பங்களிப்பை கொடுப்பார்கள்.

அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில்.. தேவையற்ற நேரம், பணம் வீணாவதை தடுக்கும் விதமாகவும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துறைக்கு இவர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள்.

"சேவ் அமெரிக்கா" என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா.. அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள்.. எங்கே நேரம் செலவாகிறது.. எங்கே பணம் வீணடிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது இனி மஸ்க் ஆக்சன் எடுக்க முடியும்.

இவர் பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக பங்கேற்பார். அரசின் நேரடி துறை இது என்றாலும்.. இது நியமன துறைதான். அரசின் அதிகாரப்பூர்வ துறை கிடையாது. இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எலான் மஸ்க் வரும் நாட்களில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+