உடலில் இருந்த காயங்கள்.. டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் மனைவி இவானா திடீர் மரணம்.. காரணம் என்ன தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் சமீபத்தில் உயிரிழந்தார். அவர் வீட்டில் இருக்கும்போது தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என நியூயார்க் நகரத்தின் தலைமை மருத்துவ ஆய்வாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
73 வயதான இவானா டிரம்ப் கடந்த வெள்ளியன்று உயிரிழந்ததாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இறப்புக்கான காரணம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் இவானா டிரம்ப் கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக அளவில் உயிரிழப்பதற்கு இவ்வாறு தவறி விழுவதே காரணம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி உயிரிழக்கும் 1,00,000 முதியவர்களில் 64 பேர் இவ்வாறு தவறி விழுந்து ஏற்படும் பலத்த காயத்தினால் உயிரிழக்கின்றனர் என்று கூறுகிறது.
1949ல் செக் குடியரசில் பிறந்த இவானா டிரம்ப் மாடலாகவும், பனிச்சறுக்கு வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவராவார். இதன் தொடர்ச்சியாக இவானா 1977ல் டொனால்ட் டிரம்பை திருமணம் செய்துகொண்டார். அப்போது டொனால்ட் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இதனையடுத்து 1980ல் டிரம்புடன் சேர்ந்து கேம்லிங் விடுதிகள் மற்றும் ஓட்டல்களை சேர்ந்து நடத்தினார். இந்த தம்பதியினருக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் என மூன்று பிள்ளைகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக 1992ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர். ஹாலிவுட் நடிகை மார்லா மேப்பிள்ஸ் - டொனால்ட் டிரம்ப் இடையேயான தொடர்புதான் இவர்களின் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சர்ச்சையையடுத்து நடிகை மார்லா மேப்பிள்ஸை டிரம்ப் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரையும் 1999ல் விவாகரத்து செய்துவிட்டு தற்போது மூன்றாவது மனைவியான மெலனியா நாஸ் உடன் வாழ்ந்து வருகிறார்.
முன்னதாக இவானா இறந்த போது டிரம்ப் கூறியதாவது, "இவானா அவளுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்ந்தார். அந்த வாழ்வு அவளுக்கு ஊக்கமளித்தது. தனது குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தாள். இவானின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications