நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அது" அணியாவிட்டாலும் பரவாயில்லை.. "மாஸ்க்" போட மறக்காதீங்க.. "மேற்படி" ரொம்ப பாதுகாப்பா இருக்குமாம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா பாதிப்பு பரவலாக இருக்கும் இந்த நேரத்தில் பாலியல் உறவின்போது முகக் கவசம் அணிவது பாதுகாப்பானது என நியூயார்க் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையோ 1,14,159 பேராக உள்ளது. இதுவரை 7.8 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். 11 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க நியூயார்க் சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மறுபடியும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம் சென்னையில் மறுபடியும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம்

 அபாயம்

அபாயம்

கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. கொரோனாவில் இருந்து ஆண்கள் குணமடைந்த பிறகும் அவர்களது விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

உடலுறவு

உடலுறவு

இதன் மூலம் கொரோனா பாலியல் ரீதியாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சிலரோ இது சாத்தியமில்லை என்கிறார்கள். இதனால் பாலியல் தொழிலும் முடங்கியது. கொரோனா நேரடியாக உடலுறவு மூலம் பரவாது என்கிறது நியூயார்க் நகர சுகாதாரத் துறை. உடலுறவை தவிர்த்தால் அது மனரீதியிலான பிரச்சினைகளை தரும்.

சுவாசம்

சுவாசம்

கொரோனா உமிழ்நீர் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவக் கூடும் என்பதால் உடலுறவில் ஈடுபடும் போது மக்கள் முகக் கவசத்தை அணிந்து கொள்ளலாம். இல்லாவிட்டாலும் சுயஇன்பம் காணலாம். உடல் ரீதியில் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் துணைக்கு பாதுகாப்பான உடலுறவு கொள்ளக் கூடியது கணவனோ அல்லது மனைவியோ ஆகிய நீங்கள்தான்.

Recommended Video

    கொரோனாவை விட மோசமான பாதிப்பு வரும்.. எச்சரிக்கும் பிரபல விஞ்ஞானி
    அச்சம்

    அச்சம்

    ஒருவேளை வேறு நபருடன் உடலுறவு கொள்ள விரும்பினாலும் அதற்கும் நியூயார்க் சுகாதாரத் துறை ஒரு ஐடியா கொடுத்துள்ளது. அதாவது கான்டம்களை பயன்படுத்திக் கொள்ளவும் ,முகக் கவசம் அணிய வேண்டும். கொரோனா குறித்து அச்சம் கொண்டவராகவும் அவர் இருக்க வேண்டும். 65 வயதை கடந்தோர் மற்றும் மருத்துவ உடல்நிலை பிரச்சினைகளை உடையவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரைகளை கூறியுள்ளது.

    English summary
    Face masks make intercourse safer in the time of Covid 19 , says Newyork Health department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X