பிரபல நடிகை யார்னு பாருங்க.. திடீர்னு போய்விட்ட சுயநினைவு.. தீவிர சிகிச்சை பிரிவில் பாப் பாடகி மடோனா
நியூயார்க்: பிரபல பாப் பாடகி மடோனா கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... அவருக்கு வயது 64... விரைவில் அவர் பூரண நலன்பெற்று வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். தற்போது பாடகி மடோனா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கியின் ஆப் பாப் (Queen Of Pop) என்று அறியப்படுபவர் மடோனா.. அமெரிக்காவை சேர்ந்தவர்.. இவர் பாடகி மட்டுமல்ல.. மிகச்சிறந்த பாடலாசிரியர்.. திறமை வாய்ந்த நடிகையும்கூட..

கடந்த சனிக்கிழமை, திடீரென மடோனாவுக்கு சுயநினைவு போயுள்ளது... இதனால், உடனடியாக அவரை நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.. இந்த தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. மடோனாவுக்கு என்ன ஆச்சோ என்று அவரது ரசிகர்கள் கலங்கி போனார்கள்.. இதையடுத்து, மடோனாவின் மேனேஜர், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், மடோனாவின் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

உடல்நிலை: அதில், "மடோனாவுக்கு தீவிரமான பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அதிக நாள்கள் தங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது... இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. ஆனாலும், இன்னமும் அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்... பூரண குணமடைந்து வருவார் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் அவரது சுற்றுப்பயணம் உட்பட எல்லாவித நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன... சுற்றுப்பயணத்திற்கான புதிய தேதி மற்றும் அடுத்தக்கட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் எல்லாம் விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்... இந்த அறிக்கையானது, ரசிகர்களுக்கு ஒருவித நிம்மதியை தந்துள்ளது என்றாலும், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்ற வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

திடீரென பாடகி மடோனா மயக்கமடைந்த நிலையில் விழுந்து கிடந்தாராம்.. அதற்கு பிறகுதான், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.. பிறகு அதை டாக்டர்கள் அகற்றிவிட்டனர் என்றாலும், தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறதாம்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications