Ask for Me ஏஐ.. டீப்சீக்கை முடிக்கப் போகும் கூகுள்.. இனி இன்ட்ரோவர்ட்களுக்கு பிரச்சனையே இல்லை!
நியூயார்க்: மனிதர்களின் வாழ்வில் ஆர்டிஃபிசியல் இண்டலிஜன்ஸ்-ன் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான சாட் ஜிபிடி, ஓபன் ஏஐ, கூகுளின் ஜெமினி உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் சீனாவால் உருவாக்கி வெளியிடப்பட்ட டீப்சீக் ஏஐ உலகையே புரட்டிபோட்டுவிட்டது.
இதுவரை வெளியான ஏஐ தொழில்நுட்பங்களிலேயே துல்லியமாக இருப்பதாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டீப்சீக் ஏஐ உள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தரப்பில் புதிய ஏஐ செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது டெஸ்ட் செய்யப்பட்டு வரும் Ask for Me என்ற அஏஐ மூலமாக மக்கள் மிகப்பெரிய பயனடைவார்கள் என்று கூறியுள்ளது. இந்த Ask for Me ஏஐ தொழில்நுட்பம் மூலமாக பயனாளர்கள் தங்களின் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் எளிதாக பொருட்கள் மற்றும் சேவை குறித்து விசாரித்து கொள்ள முடியும். அதற்காக நேரடியாக அலைபேசியில் அழைக்க தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது.
அதாவது Ask for Me என்ற ஏஐ தொழிற்நுட்பமே வணிக நிறுவனங்களிடம் பேசி பயனாளர்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து விசாரித்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பயனாளர் ஒரு தனது பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் Ask for Me என்ற ஏஐ தொழிற்நுட்பத்திற்கு சென்று, Get Started என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
அதேபோல் தங்களின் பைக்கில் என்ன பழுது பார்க்க வேண்டும், டயரை மாற்ற வேண்டுமா, ஆயில் மாற்ற வேண்டுமா என்பது குறித்த விவரங்கள் பதிவிட வேண்டும். இதன்பின் உடனடியாக ஏஐ தொழிற்நுட்பம், அந்த நிறுவனத்திடம் பேசி எந்த நேரத்தில் வரலாம், டயர் மாற்றுவதற்கு எவ்வளவு தொகை செலவாகும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்துவிடும்.
இதன் மூலமாக பயனாளர்களின் நேரம் மிச்சமாகும் என்பதோடு, விசாரிப்பதற்கும் எளிய சூழல் உருவாக்கி கொடுக்கப்படும். இந்த ஏஐ தொழிற்நுட்பத்தை டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த ஏஐ, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏஐ செயலி குறிப்பாக இன்ட்ரோவெர்ட்-களுக்கு பயன்படும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications