நாட்டுக்கே அவமானம்.. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. இத்தனை பேர் குஜராத்திகளா!
நியூயார்க்: அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்காக "முதல் பேட்ச்" விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் குஜராத்திகள் பலர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில்,
ஹரியானா - 35
குஜராத் - 33
பஞ்சாப் - 31
உத்தரப்பிரதேசம் - 3
மகாராஷ்டிரா - 2
குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.
யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்:
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
செலவு எவ்வளவு:
ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.
நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
நாடு கடத்தல்:
சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் நேற்று முதல்நாள் அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது.
அதன்படி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+ இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் நேற்று நேற்று முதல்நாள் அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி இந்த விமானம் வந்த நிலையில் நேற்று தரையிறங்கியது.
இந்த நாடுகடத்தலானது இறுதி கிடையாது.. திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications