Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகம் முழுக்க.. டிரெண்டாகும் Ghibli ஸ்டைல் புகைப்படங்கள்.. ஏஐ மூலம் எப்படி உருவாக்குவது? இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 1 வாரமாக உலகம் முழுக்க Ghibli மாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூட Ghibli ஏஐ புகைப்படங்கள் காரணமாக தங்களின் சர்வர்களே திணறுகின்றன. அந்த அளவிற்கு எங்களிடம் promptகள் வைக்கப்படுகின்றன என்று வியக்கும் அளவிற்கு பலரும் உலகம் முழுக்க Ghibli புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

Ghibli என்பது சாதாரண கார்ட்டூன் புகைப்படம் அல்ல. அது ஒரு கலை வடிவம். Studio Ghibli, Inc. என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இது அனிமேஷன் துறையில் வலுவான உலகின் நம்பர் 1 நிறுவனங்களில் ஒன்றாகும். பல படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களை இந்த நிறுவனம் இயக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் Ghibli படைப்புகள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு வெளியான மை நெய்பர் டோட்டோரோ திரைப்படத்தின் டோட்டோரோ கதாபாத்திரம், ரக்கூன் நாய்கள், பூனைகள் (நெகோ) ஆகியவை உலக அளவில் கவனிக்கப்பட்டது.

How to make Ghibli style animation picture using AI in ChatGpt Grok and Gemini

பிரின்சஸ் மோனோனோக் (1997), ஸ்பிரிட்டட் அவே (2001), ஹவ்ல்ஸ் மூவிங் கேஸில் (2004), போன்யோ (2008) மற்றும் தி பாய் அண்ட் தி ஹெரான் (2023) ஆகியவை உலக அளவில் டிரெண்டான படங்கள் ஆகும். அதிலும் இவர்களின் ஸ்பிரிட்டட் அவே (2001) படம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் அனிமேஷன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் உருவாக்கியது?

ஸ்டுடியோ கிப்லி நிறுவனமானது ஹயாவோ மியாசாகி, இசாவோ தகாஹாடா மற்றும் டோஷியோ சுசுகி ஆகியோரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். சாதாரண கார்ட்டூன் போல இல்லாமல்.. இந்த அனிமேஷன் அதிக உயிரோட்டமாக, எமோஷனலாக.. இருக்கும். பார்த்ததும்.. சாதாரண படங்களை விட அதிக உணர்ச்சிகளை தூண்டும் படங்களாக இவை இருக்கும்.

இந்த ஸ்டுடியோ கிப்லி படங்கள்தான் கடந்த 1 வாரமாக உலகம் முழுக்க வைரலாகி வருகின்றன. ChatGpt தொடங்கி Grok Ai வரை பல ஏஐக்கள் மூலம் இந்த படங்களை உலகம் முழுக்க தினமும் பல கோடி நெட்டிசன்கள் உருவாக்கி வருகின்றனர்.

ChatGPT, Grok 3 மற்றும் Gemini ஆகியவற்றைப் பயன்படுத்தி Studio Ghibli பாணி படங்கள் மற்றும் அனிமேஷன் வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது என்று இங்கே பார்க்கலாம்.

எப்படி உருவாக்குவது?

OpenAI இன் ChatGPT, GPT-4o ல் இதை செய்ய முடியும். இந்த அம்சம் பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில பணம் செலுத்தாத நபர்களுக்கும் டிராபிக்கை பொறுத்து இந்த அம்சம் கிடைக்கும்.

  • ChatGPT இணையதளம் அல்லது மொபைல் ஆப்ஸைத் திறந்து உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  • அதில் உள்ள image creation அம்சத்தை தேர்வு செய்யவும் (தற்போது பிரீமியம் பயனர்களுக்கு GPT-4o இல் மட்டுமே இது கிடைக்கிறது).
  • நீங்கள் மாற்ற விரும்பும் படத்தை இதில் பதிவேற்றவும்.
  • ஸ்டுடியோ கிப்லி பாணியில் உங்கள் படத்தை மாற்ற ChatGPTக்கு நீங்கள் prompt கொடுக்க வேண்டும்
  • உதாரணமாக இந்த prompt ஐ கொடுக்கலாம்: "Change this image into Ghibli style with exact color theme"
  • "make this into a Ghibli style animation picture"
  • இந்த promptஐ கொடுத்து சில வினாடிகள் காத்திருக்கவும். படம் எதிர்பார்ப்புகளுடன் பொருந்தவில்லை என்றால், அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை மீண்டும் prompt ஆக கொடுக்கலாம்.

இதே முறையை பயன்படுத்தி gemini, grokல் நீங்கள் prompt கொடுத்து உங்கள் புகைப்படங்களை Ghibli மாடல் படங்களாக மாற்றலாம்.

Ghibli போட்டோக்கள் என்றால் என்ன?

Ghibli என்பது சாதாரண கார்ட்டூன் புகைப்படம் அல்ல. அது ஒரு கலை வடிவம். Studio Ghibli, Inc. என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இது அனிமேஷன் துறையில் வலுவான உலகின் நம்பர் 1 நிறுவனங்களில் ஒன்றாகும். பல படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களை இந்த நிறுவனம் இயக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் Ghibli படைப்புகள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+