முதல்ல இந்த டீலை முடிங்க.. அப்போதான் H-1B விசா பற்றியே பேசுவோம்.. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்?
நியூயார்க்: H-1B விசாக்களுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் H-1B விசாக்களுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தும் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிந்ததும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும் என முன்னாள் அமெரிக்க தூதர் டிம் ரோமர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் H-1B விசா திட்ட சீர்திருத்தம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமையான நிபுணர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க நிர்வாகம் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. எச்-1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. தற்போது இதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார்.
எச்-1பி விசா
எச்-1பி விசா மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இதை ஒருமுறை புதுப்பித்து மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். விண்ணப்பதாரர்கள் அமெரிக்க முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 65,000 விசாக்கள் என்ற உச்சவரம்பு உள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து மேம்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, விசாக்கள் பொதுவாக லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படுகின்றன.
எச்-1பி விசா பெறுபவர்கள் யார்?
எச்-1பி திட்டம் முக்கியமாகத் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பிற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் உயர் திறன்கொண்ட வெளிநாட்டு நிபுணர்களுக்குப் பயனளிக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. சீனர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். இவர்கள் சுமார் 11% விசாக்களை பெற்றுள்ளனர்.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, சுமார் 400,000 எச்-1பி விசாக்களில் 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ உள்ளிட்ட முன்னணி இந்திய ஐ.டி நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு விசா வழங்கி உள்ளது. இப்போது புதிய விதியால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மிரட்டும் அமெரிக்கா
H-1B விசாக்களுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டி உள்ளது.
.
இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், H-1B விசா பிரச்சினையை மறுபரிசீலனை செய்யலாம். டிரம்ப்பின் H-1B விசாக்களுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தும் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிந்ததும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும் என முன்னாள் அமெரிக்க தூதர் டிம் ரோமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது வரி விதிப்பு
கடந்த ஜூலை மாதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் 25% வரி விதித்து, ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணமாகக் கூறியது. இந்த வரி விதிப்புகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கியது.
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா அமெரிக்காவிற்கு இடையிலான மோதலுக்கு இடையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications