டிரம்ப்தான் அதிபர்.. ஆனால் அவர் போட்டு இருக்குற டிரெஸ்.. அமெரிக்காவின் நிழல் அதிபரா எலான் மஸ்க்
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் அதிகாரபூர்வமாக அதிபர் என்றாலும்.. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்தான் பெரும்பாலான முடிவுகளில் தலையிடுகிறார்.. பெரும்பாலும் நிழல் உலக அதிபர் போல இவர் செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது.
ஒரு நாடு இருக்கிறது.. அதற்கு ஒரு தலைவர் இருக்கிறார்.. ஆனால் அவர் எடுக்கும் முடிவு எல்லாம் ஒரு பிஸ்னஸ்மேனின் நலனுக்காக என்று வைத்துக்கொள்ளுங்கள். கேட்டதும் உங்களுக்கு வேறு ஏதும் நாடு நினைவிற்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.. நாங்கள் இங்கே பேசுவது அமெரிக்கா பற்றி!

அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுவாக மற்றவர்கள் பேச்சை கேட்பவர் கிடையாது. உலகிலேயே ஒரு விஷயம் ஒருவருக்கு அதிகம் தெரியும் என்றால் அது எனக்குத்தான் என்று அடிக்கடி டிரம்ப் பல மேடைகளில் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு டிரம்ப் தான்தான் எல்லாம் என்று நினைக்க கூடியவர். ஆனால் அப்படிப்பட்ட டிரம்ப் இரண்டாவது ஆட்சி காலத்தில் அதிகமாக மஸ்க் பின்னாடி சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
முக்கியமாக டொனால்ட் டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக எலோன் மஸ்க் கணிசமான நிதி உதவிகளை செய்தார். மஸ்க் குறைந்தபட்சம் 277 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்து 2024 தேர்தலில் கேம் சேஞ்சராக இருந்தார். தனக்கு நெருக்கமான பல பிஸ்னஸ்மேன்களை அரசியல் நிதி உதவி கொடுக்க வைத்தார்.
டிரம்ப் அரசியல் மாற்றம்
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அரசியல் ரீதியாக எலான் மஸ்க்கிற்கு கட்டுப்பட்டு இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு பின் பின்வரும் காரணங்கள் உள்ளன.
1. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார்.
2. இது மிகவும் பவர்புல் துறையாகும். எலான் மஸ்க் வெள்ளை மாளிகையில் டிரம்ப் பிரீமியம் அட்வைஸர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
3. இதன் மூலம் மஸ்க் அரசு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அரசின் கொள்கைகளை மாற்ற முடியும்.
4. மஸ்க் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்.. அதிபர், துணை அதிபர், அமைச்சர்கள் தவிர யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். கிட்டத்தட்ட அதிபருக்கு இணையான பவர் இது.
5. இதெல்லாம் போக டிரம்ப்.. மஸ்க் சொல்வதையே அதிகம் கேட்கிறார். உதாரணமாக மஸ்க் இந்தியாவில் முதலீடு செய்ய வெள்ளை மாளிகையிலேயே மோடியை சந்திக்க ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பிஸ்னஸ் மீட்டிங் அதுதான்.
6. டெஸ்லா பங்குகள் தொடர்ந்து சரிந்ததால் டிரம்ப்பை டெஸ்லா வாங்க வைத்து வெள்ளை மாளிகை முன் நிறுத்தி விளம்பரம் தேடினர். இதற்கு முன் பிடன் காலத்தில் அதேபோல் பல இவி கார்கள் நிறுத்தப்பட்டாலும்.. அது பொதுவாக இவியை ஊக்குவிக்க செய்யப்பட்டது. ஆனால் இங்கே டிரம்ப் டெஸ்லாவை மட்டும் ஊக்குவிக்கிறார்.
7. இந்திய மார்க்கெட் உள்ளே மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நுழைய டிரம்ப்தான் காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
8. கிட்டத்தட்ட சரியாக சொல்ல வேண்டும் என்றால் மஸ்க்கிற்கு அரசில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் உள்ளது. அதோடு அவரின் பிஸ்னஸ்களை பாதுகாக்கவும் டிரம்ப் தயாராக இருக்கிறார்.
9. அமைச்சரவை கூட்டத்தில் கூட மஸ்க் அமைச்சர்களை கண்டிக்கிறார். ஆனால் டிரம்ப் அதை கேள்வி கேட்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மஸ்க் பவர்புல்லாக இருக்கிறார்.
உலகிலேயே அமெரிக்க அதிபர்தான் பவர் புல் நபர் என்பார்கள்.. ஆனால் அவரையே ஒருவர் இப்போது ஆட்டிப்படைகிறார் என்றால்.. அது மஸ்க்தான்!












Click it and Unblock the Notifications