அடித்து தூக்கிய கமலா ஹாரிஸ்.. போட்டிக்கே ஆள் இல்லை.. அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வு?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக தேர்வாகி உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சக கட்சி நிர்வாகிகளுக்கு போதிய நிதி கிடைக்காத நிலையில் கமலா அதிபர் வேட்பாளர் ஆவது உறுதியாகி உள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட கட்சி பிரநிதிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர். கட்சியின் வேட்பாளராக ஆவதற்கு போதுமான ஜனநாயக பிரதிநிதிகளின் ஆதரவைப் அவர் பெற்றுள்ளார். கட்சியில் அவருக்கு எதிராக நிற்க முயன்ற மற்ற ஜனநாயக கட்சி நிர்வாகிகள் யாருக்கும் பிரநிதிகள் ஆதரவு பெரிதாக கிடைக்கவில்லை.

முக்கியமாக கமலா ஹாரிஸுக்கு அதிக அளவில் நிதி கிடைத்துள்ளது. தேர்தல் நிதி திரட்டும் பணியைத் கமலா ஹாரிஸ் தொடங்கிய நிலையில், முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அக்கட்சிக்கு ₹677.6 கோடி நன்கொடை குவிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பிடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் கமலா தற்போது அதிபர் வேட்பாளர் ஆகி உள்ளார்.
கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தனது முடிவு தொடர்பாக விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்த உடனேயே, அவரது உடல்நிலை காரணமாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும் என்று பிரஷர் வைக்கப்பட்டு வருகிறது.
கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பிடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார். விரைவில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தொடர்பாக அந்நாட்டு approval ratingல் ,
டிரம்ப் வெற்றிபெற: 65% வாய்ப்பு
கமலா ஹாரி : 31% வெற்றி வாய்ப்பு
மற்ற ஜனநாயக கட்சியினர் ஒருவேளை களமிறக்கப்பட்டால்: 4% வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
தேர்தல் எப்படி நடக்கும்: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக எலக்டர்ஸ் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். மொத்தமா 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும்.
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களே பெரும்பாலும் வெற்றிபெறுவார்கள். அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அந்த வேட்பளாருக்கே வழங்கப்படும். ஆனால் சில சமயம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர் கூட எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
அதாவது ஒரு வேட்பாளருக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்து இருந்தாலும் கூட, கூடுதல் எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வேறு வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் இப்படி குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று, அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார். இப்போது பிடன் தேர்தலில் இருந்து விலகி உள்ள நிலையில் டிரம்பிற்கு சாதகமான சூழ்நிலை கிடைத்துள்ளது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications