தங்கம் விலை இன்று குறைந்ததற்கும்.. டிரம்ப் உத்தரவுக்கும் என்ன சம்பந்தம்? இனி இப்படித்தானா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அண்டை நாடுகளுடன் சர்ச்சை போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுக்கு எதிராக வரியை விதித்ததன் மூலம் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது.

கனடாவிலிருந்தும் மெக்சிகோவிலிருந்தும் அதிக அளவில் அகதிகள் வருவதாக கூறி தலா 25% வரை டிரம்ப் வரி விதித்திருக்கிறார். அதேபோல சீனாவுக்கும் 10% வரி விதித்திருக்கிறார். இதனால் டாலரின் மதிப்பு உயர தொடங்கியுள்ளது. இது தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது.

gold rate gold price

வரி விதிப்பால் எப்படி டாலர் மதிப்பு உயரும்?:

கனடா, சீனா மற்றும் மெக்சிகோவுக்கு வரி விதிக்கப்பட்டதால், அமெரிக்காவில் இந்த நாட்டை சேர்ந்த பொருட்களின் விலை உயரும். உதாரணமாக சீனாவிலிருந்து நூடுல்ஸ் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகிறது. ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டின் விலை 10 டாலர் எனில், தற்போது சீனா மீது 10% வரி விதிக்கப்பட்டால், நூடுல்ஸின் விலை 11 டாலராக உயரும். இந்த விலை உயர்வு காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் நூடுல்ஸை வாங்க தயக்கம் காட்டுவார்கள்.

எனவே நாட்கள் போக போக அமெரிக்காவில் சீன நூடுல்ஸுக்கான தேவை குறையும். முன்னாடி 100 டன் நூடுல்ஸ் வாங்கினால் இப்போது 50 டன் மட்டுமே அமெரிக்கா வாங்கும். அதாவது சீனா கைக்கு வரும் அமெரிக்க டாலரின் அளவு குறைந்துவிடும்.

இது சீனாவுக்கு பெரிய பிரச்சனை. ஏனெனில் பெட்ரோல் போன்ற முக்கிய பொருட்களை மற்ற நாடுகளிடமிருந்து வாங்க வேண்டும் எனில் சீனா அமெரிக்க டாலரைதான் கொடுக்க வேண்டும். அப்படி இருக்கையில் டாலர் வரத்து குறைந்துவிட்டால் டாலருக்கான டிமான்ட் அதிகமாகும். எப்போதுமே ஒரு பொருளுக்கு டிமான்ட் அதிகமாகும்போது அதன் விலை அதிகரிக்கும். இங்கும் அதேதான். டாலருக்கான டிமான்ட் அதிகமாவதால், அதன் விலை உயரந்திருக்கிறது.

கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான வரிகள் டாலர் விலையை உயர்த்தியுள்ளன. இது தங்கத்தில் எதிரொலித்திருக்கிறது.

தங்கம் vs அமெரிக்க டாலர்:

தங்கமும், அமெரிக்க டாலரும் எதிர் எதிர் திசையில்தான் பயணிக்கும். அதாவது டாலர் விலை உயர்ந்தால் தங்கம் விலை குறையும். அதே டாலர் விலை குறைந்தால் தங்கம் விலை உயரும். இன்று தங்கம் விலை குறைந்ததற்கு டாலரின் மதிப்பு உயர்ந்ததுதான் காரணம்.

ஒர அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை இன்று காலை 11.13 மணி நிலவரப்படி 0.3% முதல் 0.6% வரை குறைந்திருக்கிறது. இது லேசான குறைவுதான். ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கை இதேபோல இருந்தால் இந்த தங்கத்தின் விலை மேலும் குறைந்துக்கொண்டே வரும்.

தங்கம் விலை ஏன் குறைகிறது?:

உலகம் முழுவதும் தங்கம் விற்பனை அமெரிக்க டாலரில்தான் நடக்கிறது. அதாவது நாம் ஜுவல்லரிகளில் வாங்கும் ஆபரண தங்கம் கிடையாது. அதை செய்ய பயன்படுத்தப்படும் கட்டி தங்கம். அந்த கட்டி தங்கம் டாலரில்தான் விற்கப்படும். அதை வாங்கிதான் ஜுவல்லரிகள் நகையாக செய்து ரூபாயில் நமக்கு விற்கின்றன.

இப்போது பிரச்சனை என்னவெனில் தங்கம் வாங்க தேவையான டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது. உதாரணத்திற்கு 'நேற்று' ஒரு டாலரின் விலை ரூ.80 என வைத்துக்கொள்வோம். 1 கட்டி தங்கம் வாங்க 2,000 டாலர்கள் தேவைப்பட்டது.

2,000 டாலர்கள் = ரூ.1,60,000

டாலரின் மதிப்பு 'இன்று' ரூ.87 என உயர்ந்த பின்னர் இதே ஒரு கட்டி தங்கம் வாங்க 2,000 டாலர் தேவை. ஆனால் அதன் இன்றைய மதிப்பு

2,000 டாலர்கள் = ரூ.1,74,000

ஆக கூடுதலாக ரூ.14,000 ஆயிரம் தேவை. எனவே இந்திய வணிகர்கள் தங்கம் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். தங்கத்திற்கான டிமாண்ட் குறையும். டிமாண்ட் குறைந்தால் விலையும் குறையும். அப்படித்தான் இன்று தங்கத்தின் விலை 0.3% முதல் 0.6% வரை குறைந்திருக்கிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் 1.1% முதல் 1.2% வரை குறைந்திருக்கிறது.

ஆக தங்கம் விலை குறைவதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள்தான் காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+