அதிர்ச்சி! மனித ரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்! அப்படியே ஆடிப்போன ஆராய்ச்சியாளர்கள்!
நியூயார்க்: மனித ரத்தத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். உலகம் முழுக்க எல்லா இடத்திலும் Microplastics நீக்கமற நிறைந்து உள்ளது. எல்லா இடத்திலும் என்றால் எவரெஸ்டில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடியிலும் கூட பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் மலத்தில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

மனித ரத்தம்
இப்போது அதில் புதிய வரவாக இணைந்து இருப்பதுதான் மனித ரத்தம். ஆம் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக வாடகையே கொடுக்காமல் பிளாஸ்டிக் துகள்கள் உள்வாடகைக்கு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எத்தனை சதவிகிதம்
அதாவது மொத்தம் 77 சதவிகிதம் பேரின் உடலில் இந்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdamல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக Environment International இதழில் ஆய்வு கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் பாலிமர் பொருட்கள் எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது.

ஆராய்ச்சி
எங்கள் ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று ஆய்வு கட்டுரையை எழுதிய டிக் வேதாக் கார்டியன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த ஆய்வை தற்போது விரிவுபடுத்த வேண்டும். அதிக நபர்களிடம் சோதனை செய்ய வேண்டும். அதோடு அந்த பிளாஸ்டிக் துகள்கள் எப்படிப்பட்டது என்றும் ஆராய வேண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி
நாங்கள் பல நபர்களை கலவையாக எடுத்து சோதனை செய்தோம்.ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள், உடல் நலம் கொண்டவர்கள் என்று பலரை வைத்து சோதனை செய்தோம். இவர்களின் ரத்தத்தில் 700 முதல் 500,000 nanometers (nm) கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என்று சோதனை செய்தோம். இதில் 700 nm அளவு கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நமது முடியை விட 140 மடங்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

என்ன வகை பிளாஸ்டிக்
பெரும்பாலான நபர்களின் ரத்தத்தில் Polyethylene terephthalate (PET) பிளாஸ்டிக் இருந்துள்ளது. இது பெரும்பாலும் வாட்டர் பாட்டில் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் ஆகும். இந்த துகள்கள்தான் 17 பேரில் கிட்டத்தட்ட 8 பேரின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக polystyrene (PS) பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவை உணவை மூடவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். இது கிட்டத்தட்ட 4 பேர் உடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நபர்களின் ரத்தத்தில் Polyethylene terephthalate (PET) பிளாஸ்டிக் இருந்துள்ளது. இது பெரும்பாலும் வாட்டர் பாட்டில் தயாரிக்க தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் ஆகும். இத துகள்கள்தான் 17 பேரில் கிட்டத்தட்ட 8 பேரின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக polystyrene (PS) பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவை உணவை மூடவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். இது கிட்டத்தட்ட 4 பேர் உடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி
உடலில் இப்படி இத்தனை பேருக்கு பிளாஸ்டிக் இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இவை உடலில் மேலும் கீழும் ரத்தத்தில் சென்று வருகிறது. உணவு வழியாகவே இந்த பிளாஸ்டிக் பெரும்பாலும் சென்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு, காற்று, தண்ணீர், டூத் பேஸ்ட், மேக் அப் சாதனங்கள், சில மருந்துகள் வழியாக இப்படி பிளாஸ்டிக் பொருட்கள் உடலில் சேர்ந்து இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications