Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்பாட்ஸ்னா அது ஆப்பிள்தான்! 4th Generation வெளியானது.. விலை, சிறப்பம்சங்கள் முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கழள சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இத்துடன் ஆப்பிள் 4th generation ஏர்போட்ஸும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரேடியோ வைத்து பாடல் கேட்ட காலமெல்லாம் போய்.. தற்போது மைக்ரோபோன் மூலமமாக பாடல்களை கேட்டு வருகிறோம். இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வயர் ஹெட்செட் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் இசையை துல்லியமாக கேட்டால்தான், அதை முழுமையாக அனுபவிக்க முடியும். அந்த வகையில், சோனி தரமான ஹெட்போன்களை இறக்க தொடங்கியது.

apple iphone16 series apple airpods 16

இதைவிட மேம்பட்ட தரத்தில் ஹெட்போன்களை இறக்க வேண்டும் என்று முடிவெடுத்து தனது பயனாளர்களுக்காக ஏர்பாட்ஸ்(AirPods) எனும் ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் களத்தில் இறக்கியது. கடந்த 2016ம் ஆண்டுதான் முதல் தனது முதல் ஏர்பாட்ஸை ஆப்பிள் வெளியிட்டது. அப்போது முதல் கடந்த 2021 வரை 3 தலைமுறை என ஏர்பாட்ஸை அறிமுகப்படுத்தி விற்று வருகிறது. எவ்வளவு விற்றாலும், மீண்டும் மீண்டும் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காரணம் இதன் குவாலிட்டிதான். இதை ப்ளூடூத் மற்றும் வைஃபை மூலம் கனெக்ட் செய்ய முடியும். மற்ற ஹெட்செட்டை விட இது அளவில் சிறியதாகவும், எடை குறைவாகவும், கையடக்கமாகவும் இருப்பதால் பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. அதேபோல 5 மணி நேரம் வரை தொடர்ந்து இது சார்ஜ் நிற்கும். மட்டுமல்லாது ஐபோன்களுடன் எளிதில் இதை கனெக்ட் செய்ய முடியும். மற்ற போன்களிலும் இதை கனெக்ட் செய்துக்கொள்ளலாம்.

எல்லாவற்றையும் விட சவுண்ட் குவாலிட்டிதான் மற்றதிலிருந்து, ஏர்பாட்ஸை தனித்து காட்டுகிறது. இதில் ஸ்பேஷியல் ஆடியோ முறை இருக்கிறது. இது 3D சவுண்டை உருவாக்கும். திரைப்படங்கள், கேமிங், இதர வீடியோக்கள் என எல்லவற்றிலும் நிஜத்தில் நாம் கேட்கும் சப்தங்களை போல ஸ்பேஷியல் ஆடியோ உணர வைக்கும்.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் 1st generation, 2016லும், 2nd generation, 2019லும் வெளியானது. இதே ஆண்டில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ வெளியானது. இதனையடுத்து 2020ம் ஆண்டு AirPods Max வெளியானது. இறுதியாக 2021ல் 3rd generation வெளியானது.

இதனையடுத்து இன்று ஆப்பிள் ஏர்போட்ஸ் (AirPods) 4th generation வெளியாகியுள்ளது. கலிபோர்னியா, குப்பர்டினோவில் இதனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் சிறப்பம்சமாக பல விஷயங்கள் இருக்கிறது.

முதல் விஷயம், ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஸலேஷன். அதாவது, இந்த ஏர்பாட்ஸ் வைத்து நாம் பாட்டு கேட்டும்போது.. வெளியிலிருந்து வரும் இரைச்சல்கள் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது. வெளியிலிருந்து வரும் ஒலி அலைகளுக்கு ஏற்பட இந்த ஏர்பாட்ஸ் தனியாக ஒலி அலைகளை உருவாக்கும். இது இரண்டும் ஒன்றாக சந்திக்கும்போது நமக்கு எந்த இரைச்சலும் கேட்காது.

இதனை யுஎஸ்பி - சி டைப் மூலம் சார்ஜ் செய்துக்கொள்ளலாம். தவிர, வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இந்த ஏர்பாட்ஸில் ஹைலைட்டே பேட்டரிதான். மற்ற 3 ஜெனரேஷன் ஏர்பாட்ஸை விட இது அதிக நேரம் சார்ஜ் தாங்கும். அதாவது அதிகபட்சமாக 30 மணி நேரம் வரை இதை பயன்படுத்த முடியும். மேலும் இதன் மூலம் siri எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவியை இயக்க முடியும்.

இது மூன்று மாடலாக வெளியாகியுள்ளது. முதல் மாடல் AirPods 4 இதன் விலை ரூ.10,681. இரண்டாவது மாடல் AirPods 4 Active Noise Cancellation. இதன் விலை ரூ.14,817 என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது AirPods Max. இதன் விலை ரூ.45,421 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று ஏர்பாட்ஸுக்கும் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. செப்.20 முதல் விற்பனையாகும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பொதுவாக மற்ற நிறுவனங்களின் ஹெட்செட்டை விட ஆப்பிள் பாதுகாப்பானது. இதனை நிருபிக்கும் விதமாக, AirPods 4ல் மூன்று ஹெல்த் கேர் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன் மூலம் காது சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், ஆப்பிள் Hearing Protection எனும் அம்சத்தை இதில் கொடுத்திருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள் என்ன?: இது காதை பாதிக்காத அளவுக்கு சவுண்டை வெளியேற்றும். மட்டுமல்லாது நமது விருப்பத்திற்கு ஏற்பட டெசிபல் அளவை நம்மால் கூட்டவும் முடியும், குறைக்கவும் முடியும். சில வீடியோக்களில் திடீரென அதிக அளவு சவுண்ட் வரும், செல்போன்களில் நோட்டிஃபிகேஷன்கள் வரும்போதும் திடீரென சவுண்ட் காதை கிழிக்கும். அப்படி வரும்போது நாம் நிர்ணயித்துள்ள அளவுக்கு அந்த சவுண்ட தானகவே குறைந்துவிடும். இதைத்தான் Hearing Protection செய்கிறது.

அதேபோல இரண்டாவது பாதுகாப்பு அம்சம், Hearing Test. இது காதில் சில ஒலிகளை ஒலிக்கவிடும். அதை நாம் எந்த அளவுக்கு கேட்கிறோம் என்பதை உணர்ந்து, ஏர்பாட்ஸ்ஸின் ஆடியோ செட்டிங்ஸை நம்மால் மாற்றி அமைக்க முடியும். இதன் மூலம், ஒவ்வொரு தனி நபரும் தங்களுக்கு வசதியான ஒலி வடிவதை பெற முடியும்.

மூன்றாவது அம்சம் Hearing Aid feature. இந்த அம்சம் லேசானது முதல் மிதமான காது கேளாமை உள்ள பயனர்கள் அல்லது இரைச்சல் நிறைந்த சூழலில் உரையாடல்களைக் கேட்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய போன்களையும், புதிய ஆப்பிள் வாட்ச்சையும் வெளியிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+