சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்.. சரியான நேரத்தில் கை கொடுப்பாரா எலான் மஸ்க்? காத்திருக்கும் ட்விஸ்ட்
நியூயார்க்: வரும் நவம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ்-ன் Crew-9 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. பூமியிலிருந்து விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் இது, வரும்போது சுனிதா வில்லியம்ஸை அழைத்து வருமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
விண்வெளி ஆய்வு என்பது, மனித குலத்திற்கு இன்றியமையாததாக மாறியிருக்கிறது. ஏனெனில், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை கண்டுபிடித்தால்தான், நாம் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். அதேபோல, பூமியை பாதுகாக்கவும் விண்வெளி ஆய்வு முக்கியமாக இருக்கிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் விண்வெளி ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

ஆய்வுக்காக பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்கி விண்வெளி வீரர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி ஆய்வு செய்ய விண்வெளிக்கு சென்றவர்தான் சுனிதா வில்லியம்ஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், நீண்ட காலமாக அமெரிக்கா சார்பில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். அவரை அங்கு கொண்டு சென்றது ஸ்டார்லைனர் எனப்படும் விண்கலன்தான். இதை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்தான் உருவாக்கியிருந்தது. விண்வெளி துறையில் போயிங்கின் முதல் பயணம் இதுதான். எனவே தொடக்கத்தில் சில பிரச்னைகள் இருந்தது. இருப்பினும் வெற்றிகரமாக சுனிதாவையும், புட்ச் வில்மோர் எனும் மற்றொரு வீரரையும் விண்வெளிக்கு ஸ்டார்லைனர் கொண்டு சேர்த்துவிட்டது.
இது மட்டும் போதுமா? அழைத்து சென்ற இதே ஸ்டார்லைனர்தானே மீண்டும் அவர்களை பூமிக்கு கொண்டுவர வேண்டும்? இங்குதான் பஞ்சாயத்து கிளம்பியது. அதாவது, சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தை செய்ய முடியாத அளவுக்கு ஸ்டார்லைனரில் தற்போது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. தரையிறங்கும்போது இது இரண்டும் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில்.. பூமிக்கு நுழையும் போது கட்டுப்பாடு இல்லாமல் எங்காவது விழுந்து முற்றிலுமாக அழிந்துவிடும்.
சுனிதாவின் பயண காலம் வெறும் ஒரு வாரம்தான். ஆனால் ஸ்டார்லைனர் செய்த பஞ்சாயத்து காரணமாக 2 மாதங்களாக சுனிதா விண்வெளியில் சிக்கியுள்ளார். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்று? பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அடுத்த ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று விண்வெளிக்கு போகுது.. அதுல கூப்பிட்டுக்கலாம் என இஸ்ரோ சொல்லிவிட்டது.
இப்படி இருக்கையில், வரும் நவம்பர் மாதம் Crew-9 எனும் ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புகிறது. இதில் 4 பேர் வரை பயணிக்கலாம். ஆனால், அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் என இருவர் மட்டும்தான் அனுப்பப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது, இதில் சுனிதா பூமிக்கு திரும்புவாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. சிக்கலில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ்க்கு எலான் மஸ்க் சரியான நேரத்தில் கை கொடுப்பாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதற்கு இஸ்ரோ இன்னும் பதில் சொல்லவில்லை. ஆனால், விண்வெளி துறை ஆய்வாளர்கள், நவம்பரில் சுனிதா பூமிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். ஏனெனில், சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்டார்லைனர் கொஞ்ச நாட்களில், ஆட்கள் யாரும் இல்லாமல் பூமிக்கு வந்துவிடும். பின்னர், Crew-9 சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்படும். அது சில நாட்களுக்கு அங்கே இருக்க வேண்டும். உடனே திரும்ப முடியாது. எனவே சுனிதாவையும் உடனே அழைத்து வர முடியாது என்று கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications