நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்கிட்ட பேச முடியாது! பிடனிடம் போன் பேச மறுத்த சவுதி சல்மான், அரபு ஷேக்.. பரபரப்பு! என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வரும் அதே நேரத்தில்தான் சர்வதேச அரசியலில் இன்னொரு பெரிய திருப்பம் நடந்து கொண்டு இருக்கிறது.. அது அமெரிக்காவின் எண்ணெய் வள வீழ்ச்சி! ஆம் கச்சா எண்ணெய் வேண்டி உலக நாடுகள் பலவற்றிடம் அமெரிக்கா கெஞ்சும் நிலைக்கு சென்று இருக்கிறது.. அதிலும் உலக தலைவர்கள் "சிலர்" பிடனிடம் போனில் பேச கூட மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன நடக்குது? வாருங்கள் பார்க்கலாம்!

அமெரிக்காவின் எண்ணெய் பிரச்சனையை எளிதாக மூன்று புள்ளிகளில் விளக்கலாம். point 1 - அமெரிக்கா ரஷ்யாவிடம் சோயஸ் ராக்கெட் தொடங்கி பல விஷயங்களை நம்பி இருந்தது. அதில் கச்சா எண்ணெயும் ஒன்று. ரஷ்யாவிடம் அமெரிக்கா 950 மில்லியன் டாலருக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.

point 2 - இப்போது ரஷ்யா - உக்ரைன் போரால் ரஷ்யாவை அமெரிக்கா தனிமைப்படுத்த விரும்பி பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. point 3 - ஆனால் பொருளாதார தடைக்கு இடையே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் அதன் மூலம் ரஷ்யா வருமானம் பார்க்கும் என்பதால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் வழக்கத்தையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது. simple!

ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..! ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!

 எண்ணெய்

எண்ணெய்

இதனால் தற்போது ரஷ்யாவிடம் வாங்கும் எண்ணெய்க்கு ஈடாக அமெரிக்கா வேறு எங்காவது எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தொடர்பாக வெனிசுலாவுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதேபோல் ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையும் இன்னும் முடியவில்லை. இதனால் இன்னொரு பக்கம் சவுதி மற்றும் அமீரகம் இரண்டு நாட்டிடம் இருந்து எண்ணெயை கூடுதலாக வாங்கும் திட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது.

 போனை எடுக்கவில்லை

போனை எடுக்கவில்லை

ஆனால் அமெரிக்காவுடன் இதை பற்றி பேச கூட சவுதி, அமீர்கான் இரண்டும் விரும்பவில்லை என்று கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கார்டியன் மற்றும் வால் ஸ்டிரிட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் பிடனுடன் ஏற்பாடு செய்யப்பட இருந்த போன் காலில் பேச இரண்டு நாட்டு தலைவர்களும் மறுத்துவிட்டனர். சவுதி முடி இளவரசர் சல்மான், அமீரகத்தின் ஷேக் முகமது பின் ஸியாத் அல் நஹ்யான் ஆகிய இரண்டு பெறும் பிடன் உடன் பேச மறுத்து உள்ளனர்.

பல முறை கோரிக்கை

பல முறை கோரிக்கை

இவர்கள் இருவரிடமும் போனில் பேச வேண்டும் என்று அமெரிக்க அதிபர் சார்பாக பலமுறை கோரிக்கை வைக்கப்பட்ட பின்பும் கூட அந்த கோரிக்கையை இவர்கள் இருவரும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் டாப் அதிகாரி ஒருவர், போன் பேச நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஏதும் பலன் அளிக்கவில்லை என்று தி வால் ஸ்டிரிட் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். 2018க்கு பின்பே அமெரிக்கா சவுதி உறவு சரியில்லை.

ஜமால் காசோக்கி

ஜமால் காசோக்கி

அதேபோல் பத்திரிகையாளர் ஜமால் காசாக்கி மரணத்தில் சவுதி சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் பிடனின் ஆட்சிக்கு கீழ் உளவுத்துறை ரிப்போர்ட் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் இரண்டு நாட்டு உறவை மொத்தமாக பாதித்தது. அதேபோல் ஏமன் போரில் சவுதிக்கு அமெரிக்கா உதவி செய்யவில்லை என்ற கோபமும் சவுதிக்கு உள்ளது. அதேபோல் பிடன் தனது பிரச்சாரத்தின் போது சவுதியில் இப்போது இருக்கும் அரசு மரியாதைகளை இழந்துவிட்டதாக விமர்சனம் செய்து இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அப்படி சவுதியை விமர்சனம் செய்த அதே பிடன்தான் இப்போது சவுதியிடம் கச்சா எண்ணெய்க்காக கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் போது சட்டென கச்சா எண்ணெய் எடுப்பதை உயர்த்த வேண்டும். அதற்கான வலிமை இந்த இரண்டு நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு அடிபணிய மறுப்பது அமெரிக்காவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

English summary
Saudi Salman and UAE Sheik refused to talk to US president Biden over Oil import.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X