விண்வெளியில் இருந்தவாறே அமெரிக்க தேர்தலில் ஓட்டு போடும் சுனிதா வில்லியம்ஸ்! எப்படி தெரியுமா?
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு அங்கிருந்தவாரே வாக்களிக்க இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், 7 நாட்களில் பூமிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பாரத விதமாக விண்வெளியில் சிக்கியிருக்கிறார். அடுத்த ஆண்டுதான் அவர் பூமிக்கு திரும்ப இருக்கிறார்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றிருக்கிறார். எனவே, எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வாக்களிக்க வேண்டும். வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இந்த தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தேர்தலுக்கு முன் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மாட்டார் என்பதே இப்போது இருக்கும் சிக்கல்.
கடந்த 1961ம் ஆண்டிலிருந்து அமெரிக்க விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வருகிறது. கடந்த 2000மவது ஆண்டிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனை அமெரிக்கா 24 ஆண்டுகளாக செய்து வருகிறது. இதற்கிடையில் பல தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம், அமெரிக்க குடிமகன்களான விண்வெளி வீரர்கள் வாக்களிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த பிரச்னைக்கு அமெரிக்க ஒரு தீர்வையும் வைத்திருக்கிறது. இதன் மூலம்தான் தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க இருக்கிறார்.
அதாவது, ஒரு விண்வெளி வீரர் தேர்தல் காலத்தில் விண்வெளிக்கு செல்கிறார் எனில், அவர் வாக்களிப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவர் விண்வெளிக்கு செல்லும் போது அங்கு வாக்குப்பதிவு செய்ய அவருக்கு சிறப்பு வாக்குப்பதிவு இயந்திரம் வழங்கப்படும். இந்த இயந்திரம் மூலம் தனது வாக்கை பதிவு செய்து, அதை விண்வெளியிலிருந்து பூமிக்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பப்படும் வாக்கை நாசா பெற்று சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பும்.
இந்த நடைமுறை கடந்த 1990 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. முதன் முதலில் கடந்த 1997ம் ஆண்டு, விண்வெளி வீரர் டேவிட் வுல்ஃப் விண்வெளியில் இருந்து அதிபர் தேர்தலில் வாக்களித்து இந்த நடைமுறையை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டில், விண்வெளி வீரர்களான கிரெக் சாமிடோஃப் மற்றும் எட் லூ ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வாக்களித்தனர்.
கடைசியாக 2020 இல், விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் விண்வெளியிலிருந்து வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications