சீனாவிற்கு ஆப்பு வைக்கும் குட்டி நாடு.. இந்தியாவுடன் கைகோர்க்கும் தைவான்.. இதுதான் மாஸ்டர்பிளான்
டெல்லி: இந்தியா உடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தைவான் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக இந்தியாவை பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளது.
இந்தியாவில் Made in India என்ற பெயரில் நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் இப்படி சொல்லப்படும் நிறுவனங்கள் பல Made in India கிடையாது. மாறாக Assemble In India என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் புதிய பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை வாங்குகின்றன.
1. சீனாவில் இருந்து பொருட்கள் வாங்கி இந்தியாவில் அதை Assemble மட்டும் செய்வார்கள். அதாவது இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மாட்டார்கள்.
2. அல்லது White Label செய்வார்கள். அதாவது சீனாவில் உற்பத்தி செய்வார்கள். அதை இந்தியா கொண்டு வந்து நம்முடைய நிறுவனங்கள் பெயரில் லேபிள் மட்டும் போடுவார்கள்.

3. இன்னும் சில நிறுவனங்கள் சீனாவின் வேறு வேறு நிறுவனங்களில் இருந்து பாகங்களை வாங்கி உற்பத்தி செய்வார்கள்.
4. பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி என்ற பெயரில் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கின்றன.
5. இதனால் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும்.. சீனாவிற்கு இறக்குமதி வரி அழ வேண்டிய அவலம் உள்ளது.
6. இப்படி இந்தியாவை பயன்படுத்தி சீனா மறைமுகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
தைவான் பிளான்
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா உடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தைவான் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக இந்தியாவை பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளது. சீனாவிற்கு இணையாக தைவான் உற்பத்தி செய்கிறது.
பெரிய செமி கண்டக்டர் தயாரிப்பாளராக இருக்கும் தைவான் உலகின் 70% சிப்களை உற்பத்தி செய்கிறது. இவைதான் AI, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு அவசியமானது. இந்தியா விதிக்கும் உயர் கட்டணங்கள் காரணமாக தற்போது சிறிய மற்றும் நடுத்தர தைவான் நிறுவனங்களின் முதலீட்டுக்கு இடையூறாக உள்ளது.
இதன் காரணமாகவே தைவான் இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள வலுவாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என்று கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் இல்லையென்றாலும்.. இந்தியா-தைவான் வர்த்தக உறவுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, இந்தியாவில் தைவான் முதலீடு 4 பில்லியன் டாலர்களை இதுவரை செய்துள்ளது.
தைவான் இந்தியா உறவு
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா உடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தைவான் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இந்தியா எங்களுடன் இணைந்து தயாரிக்க வேண்டும். தைவான் நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும். இதற்காக முதலீட்டிற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வளரும். சீனாவை நம்பி இருக்க வேண்டியது இல்லை.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை. இந்தியாவில் உற்பத்தி செய்ய தைவான் உதவும். ஆனால் இந்தியா விதிக்கும் உயர் கட்டணங்கள் காரணமாக தற்போது சிறிய மற்றும் நடுத்தர தைவான் நிறுவனங்களின் முதலீட்டுக்கு இடையூறாக உள்ளது.
இதனால் இந்தியா வரிகளை குறைக்க வேண்டும். இல்லையென்றால் இந்தியா உடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தைவான் தயாராக உள்ளது. தைவான் உடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக உள்ளது, என்று தைவான் கூறி உள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications