ஆப்பிள் வாட்ச் Series 10 வெளியானது.. விலை என்ன தெரியுமா? சிறப்பம்சமே இதுதான்
நியூயார்க்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச்சின் 10வது சிரியஸ் இன்று வெளியாகியுள்ளது. இது, மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை விட பெரிதும் மாறுபட்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவத்தின் அனைத்து பொருட்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிள் வாட்களுக்கு அதிக அளவில் மசுவு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் முதல் சீரியஸ் கடந்த 2015ல் வெளியிடப்பட்டது. அப்போது தொடங்கி இப்போது வரை ஆப்பிள் வாட்ச்தான், ஸ்மார்ட் வாட்ச்களில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

உடற்பயிற்சி, உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுகள், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்டுபிடித்து சொல்லும். தவிர, ஐபோனுடன் இதனை கனெக்ட் செய்திருந்தால், செல்போனுக்கு வரும் மெசேஜ், இமெயில் ஆகியவற்றை இந்த வாட்ச் மூலம் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும்.
மேலும், ஐபோனில் மியூசிக் பிளேபேக்கை இந்த வாட்ச் மூலம் கட்டுப்படுத்த முடியும். மட்டுமல்லாது காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளுக்கு Apple Pay இந்த வாட்ச் சப்போர்ட் செய்கிறது. சோஷியல் மீடியாக்களையும் இதன் மூலம் இயக்க முடியும். SRI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில செயல்படும் கருவியையும் இதன் மூலம் இயக்க முடியும். ஐபோன்களுக்கு வரும் அழைப்புகளை இதன் மூலம் ஏற்கவும், துண்டிக்கவும் முடியும். மிக முக்கியமாக இதன் ஜிபிஎஸ் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும்.
இதுவரை
1. Apple Watch Series 1
2. Apple Watch Series 2
3. Apple Watch Series 3
4. Apple Watch Series 4
5. Apple Watch Series 5
6. Apple Watch Series 6
7. Apple Watch Series 7
8. Apple Watch SE
9. Apple Watch Ultra
என 9 மாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒவ்வொரு மாடலை விட, அடுத்த மாடல் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இந்நிலையில் கலிபோர்னியா, குப்பர்டினோவில் இன்று Apple Watch Series 10 வெளியாகியுள்ளது. இரண்டு மாடல்களாக இது வெளியாகியுள்ளது. GPS மாடலின் விலை விலை ரூ.32,891, GPS + Cellular version-ன் விலை ரூ.41,311 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
Apple Watch Series 10 மாடலில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பாதிப்பான, Sleep apnea என்ற பிரச்னை குறித்து இந்த வாட்ச் எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கத்தில் திடீரென மூச்சு நின்றுவிடும். உயிரை காப்பாற்ற மூளை சிக்னல் கொடுப்பதால் அந்த நபர் விழிப்பார். பிறகு மூச்சு நார்மலாகும். ஆனால் இந்த பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 உதவும். அடுத்த நாள் டேட்டாவை பார்த்து முந்தைய நாள் இரவு நடந்ததை தெரிந்துகொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications