நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா இஸ் பேக்.. வாழ்த்து சொன்ன உலக தலைவர்களுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்.. இனிதான் ஆட்டமே!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா இஸ் பேக் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று பொருள்படும் வகையில் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 214 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று இருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். 290 வாக்குகளை பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் டிரம்ப் இன்னும் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களிடம் பிடன் வலுவான மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார்.. அந்த மெசேஜ்.. அமெரிக்கா இஸ் பேக்!

அமெரிக்கா மீண்டது

அமெரிக்கா மீண்டது

அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது.. இனி டிரம்பிற்கு கீழ் இருந்தது போல அமெரிக்கா தனியாக இருக்காது. இனி உலக நாடுகளின் கேமில் அமெரிக்காவும் இருக்கும். அமெரிக்காவை இனியும் தனித்து விட முடியாது , என்பதை உணர்த்தும் வகையில் பிடன் இப்படி பேசி இருக்கிறார்.

ஈரான் ஒப்பந்தம்

ஈரான் ஒப்பந்தம்

டிரம்பின் ஆட்சிக்கு கீழ் பெரும்பாலான நட்பு நாடுகள் அமெரிக்காவை பகைத்துக் கொண்டது, பாரிஸ் ஒப்பந்தம், உலக சுகாதார மையம், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் என்று பலவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் சர்வதேச அளவில் சீனாவின் கை கொஞ்சம் ஓங்கியது. இந்த நிலையில்தான் அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று பிடன் கூறியுள்ளார்.

வீழ்ச்சி

வீழ்ச்சி

அமெரிக்காவின் மதிப்பை மீட்டு எடுப்பேன், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு இருந்த குரலை மீட்டு கொண்டு வருவேன், டிரம்ப் எடுத்த தவறான முடிவுகள் அமெரிக்காவை வீழ்ச்சியை நோக்கி கொண்டு சென்றுள்ளது, அதை மீட்டு கொண்டு வருவேன் என்றும் பிடன் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் உலக அளவில் மீண்டும் புதிய எழுச்சி பெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

வலுவான மெசேஜ்

வலுவான மெசேஜ்

பிடனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், சவுதி, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டு தலைவர்களிடம் பிடன் இந்த வலுவான மெசேஜை தெரிவித்துள்ளார். இதனால் ஈரான் ஒப்பந்தம், பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவற்றில் மீண்டும் அமெரிக்கா இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிடனுக்கு இந்தியா பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிடன் வெற்றிக்கு இன்னும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The USA is back: Biden sends a strong message to world leaders who wished him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X