டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்! அமெரிக்காவுடன் முதல் முறை மோதல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் இப்போது பெரும் கோபத்திலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போரை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதிலும், அவரது ராணுவ திட்டங்களிலும் நிறைய தவறுகள் இருப்பதாக மத்திய கிழக்கு நாடுகள் கருதுகிறதாம்.

donald trump

வளைகுடா நாடுகளின் கோரிக்கை என்ன?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான போர் நீடித்தால், ஈரான் தங்களை இலக்கு வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கும் என்று வளைகுடா நாடுகள் பயப்படுகின்றன.

ஏற்கனவே பலமுறை இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (கேட்டுள்ளன. மேலும், ஒருவேளை போர் தீவிரமடைந்தால், அமெரிக்க ராணுவம் தங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் என்ற தெளிவான உறுதியையும் அவை அமெரிக்காவிடம் கேட்டுள்ளன.

கடைசி நேரத்தில் தாக்குதலை நிறுத்திய டிரம்ப்

ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:

சவுதி அரேபியாவின் கோரிக்கை: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினார்.

அமைதிப் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் அமைதியை விரும்பும் கத்தார் போன்ற நாடுகள், அமெரிக்கா - ஈரான் இடையே தூதரக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

உலகில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் 'ஹோர்முஸ் ஜலசந்தி' என்ற குறுகிய கடல் வழியாகத் தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழியை ஈரான் அடைத்துள்ளதால், உலக நாடுகளுக்கு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.

இதை மீண்டும் திறப்பதற்காக கத்தார் ஒரு சமரசத் திட்டத்தை ஈரானிடம் வழங்கியது. ஈரான் இதற்கு கொள்கை அளவில் சம்மதித்தாலும், அந்த கடல் வழியைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க விரப்புகிறது. ஆனால், இந்த கட்டணக் கோரிக்கையை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது.

வளைகுடா நாடுகளுக்குள் இரு வேறு கருத்துக்கள்

ஈரானை எப்படி கையாள்வது என்பதில் வளைகுடா நாடுகளுக்குள்ளேயே ஒரே மாதிரியான கருத்து இல்லை:

ஐக்கிய அரபு அமீரகம்: ஈரான் மீது அமெரிக்கா கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் விரும்புகிறது.

சவுதி அரேபியா: போரை முற்றிலும் தவிர்த்து அமைதி வழியில் பேச வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஏனெனில், போர் தீவிரமடைந்தால் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை ஈரான் தகர்த்துவிடும் என்று சவுதி பயப்படுகிறது.

இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

அமெரிக்காவில் விரைவில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருப்பதால், டிரம்ப் இப்போது பெரிய போரை விரும்புவதில்லை. அதே சமயம், வளைகுடா நாடுகளின் ஆதரவும், அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களும் இல்லாமல் அமெரிக்காவால் ஈரானை சமாளிக்க முடியாது.

இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் இப்போது பெரும் கோபத்திலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போரை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதிலும், அவரது ராணுவ திட்டங்களிலும் நிறைய தவறுகள் இருப்பதாக மத்திய கிழக்கு நாடுகள் கருதுகிறதாம். டிரம்ப் இதில் முடிவு எடுக்காமல் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை.

எனவே, வளைகுடா நாடுகள் இப்போது அமெரிக்காவின் ஒவ்வொரு முடிவையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தங்கள் நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு அவசர ராணுவ நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள வளைகுடா நாடுகள் தயாராக இல்லை என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+