குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
நியூயார்க்: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஷாம்பெய்ன், ஒயின் மற்றும் பிற மது வகைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200 சதவீதம் வரி விதிக்கப் போவதாக மிரட்டியது உலக அளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால் ஒரு அவுன்ஸ் தங்கம் 2971 டாலர் அளவுக்கு உயர்ந்தது. இது பிப்ரவரி மாதத்தை விட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.34 கிராம் என்பதும், இந்திய மதிப்பில் இதன் விலை கிட்டத்தட்ட 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்று இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சீண்டி வருவது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பல்வேறு நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிப்பை அறிமுகப்படுத்துவேன் என கூறி அதிர வைத்திருக்கிறார். குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ இந்தியா உள்ளிட்ட நாடுகள் 100% அளவுக்கு வரி விதிக்கும் நிலையில் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் விதிப்போம் என்றதோடு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு எதிர்ப்பா அல்லது ஆதரவா என்பது குறித்து எந்தவித நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருக்கிறது.
ஆனால் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 26 பில்லியன் யூரோ மதிப்பிலான வரி விதிக்கும் முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்திருக்கிறது. இதனால் கடும் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெய்ன் உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் எனவும், இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெய்ன் தொழிலை மேம்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார்.
மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என கூறியிருப்பது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அட்லாண்டிக் கடலின் இருபுறமும் வர்த்தக போரினை டொனால்ட் டிரம்ப் தொடங்கி இருப்பதாக வர்ணிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
உலக அளவில் வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதோடு புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 2971 டாலருக்கு விற்பனையானது. இதுவரை இல்லாத அளவு என்பதோடு கடந்த பிப்ரவரியில் பதிவான அனைத்து தங்க விலை சாதனைகளையும் அடித்து நொறுக்கி இருக்கிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.34 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் இப்போதைக்கு பாதுகாப்பான முதலீடு தங்கம் என்பதால் அதில் முதலீடு செய்வதும், வரும் காலங்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தற்போது வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications