Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்வர்ட் பல்கலைக்கழக வழக்கில் டிரம்புக்கு நோஸ் கட்! அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பழமை வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் இங்கு உள்நாடு மட்டுமின்றி, சர்வதேச நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் படித்து வருகின்றனர்.

us-federal-judge-temporarily-blocks-trump-s-ban-on-international-students-at-harvard

வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை

அந்த வகையில் தற்போதும் 6,703 வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 1,203 சீன மாணவர்களும், 788 இந்திய மாணவர்களும் அடங்குவர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு இடியை இறக்கி உள்ளது.

அதன்படி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கும் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்டத்தை ரத்து செய்வதாக டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வருகிற கல்வியாண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முடியாது. அத்துடன் ஏற்கனவே பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களும் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ வேண்டும்.

சட்ட அந்தஸ்து ரத்தாகி விடும்

ஏனெனில் ஹார்வர்டில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் சட்ட அந்தஸ்து ரத்தாகி விடும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க உள்துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் எழுதிய கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகத்தில், 'அமெரிக்க எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத ஆதரவு கிளர்ச்சியாளர்கள்' யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹார்வர்ட் வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இருப்பதாக உள்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் ஹார்வர்ட் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை உள்துறை சார்பில் கேட்கப்பட்டு இருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்றும் கூறியது.

மேலும் நீதிமன்றத்திலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி அல்லிசன் புரோக்ஸ் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்காலிக ஆறுதலை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+