அப்படி போடு.. இந்தியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அதிபர் டிரம்ப்.. எதிர்பார்க்காத அசத்தல் அறிவிப்பு!
நியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இந்தியர்களுக்கு ஆதரவாக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார். அதன்படி ஹெச்-1பி விசா தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றும், நாட்டில் திறமையான பணியாளர்களின் தேவை என்றும் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மீண்டும் விவாதம் ஆகி உள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவது மிகப்பெரிய அளவில் விவாதப்பொருளாகி உள்ளது. முக்கியமாக இந்தியர்கள் குடியேறுவது அங்கே அமெரிக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் AIக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். இந்திய பூர்வீகத்தை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்தியர்கள் பலர்.. எச் 1 பி விசாவை அதிகரிக்க வேண்டும் என்றுள்ளனர்.
2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அங்கே இந்தியர்கள் இதனால் மேலும் குடியேறுவார்கள் என்ற அச்சம் உள்ளது. . அமெரிக்காவின் உயர் பொறுப்புகளில் சுந்தர் பிச்சை, சத்யா நாடெல்லா உள்ளிட்ட இந்தியர்கள்தான் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் மீது கோபம்:
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியர்களை அமெரிக்கர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். தீவிர வலதுசாரி அமெரிக்கர்கள் இணையத்தில் இந்தியர்களுக்கு எதிராக கடுமையான போஸ்டுகளை செய்ய தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் சாலை ஓரம் மலம் கழிக்கிறார்கள். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை.
இந்தியர்கள் சுத்தம் இல்லாதவர்கள் என்றெல்லாம் கடுமையான பேச தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள்.. இந்தியர்களிடம் சுத்தம் இல்லை.. இந்தியர்களின் உணவு மிக மோசமானது. அதை சாலை ஓரங்களில் சத்தமின்றி சமைக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப் எச் 1 பி விசா:
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இந்தியர்களுக்கு ஆதரவாக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார். அதன்படி ஹெச்-1பி விசா தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றும், நாட்டில் திறமையான பணியாளர்களின் தேவை என்றும் கூறி உள்ளார். .
எச்-1பி விசா பற்றி எனது எண்ணத்தை நான் மாற்றவில்லை. எப்பொழுதும் மிகவும் திறமையான நபர்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. நம் நாட்டில் புத்திசாலிகள் தேவை. முன் எப்போதும் இல்லாத வகையில் அவர்களுக்கு என்னுடைய ஆட்சியில் வேலை கிடைக்கும், என்று கூறி உள்ளார். இது இந்தியர்களுக்கு ஆதரவாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்ட H-1B பெத்தவர்களின் எண்ணிக்கை 2018 நிதியாண்டில் 570,368 இல் இருந்து 2019 நிதியாண்டில் 601,594 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2020 நிதியாண்டில் எண்ணிக்கை 368,440 ஆகக் குறைந்துள்ளது. 2021 நிதியாண்டில் H-1B நிலையில் சேர்க்கை 148,603 ஆகக் குறைந்தது. கொரோனா காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்தது. 2022ல் 4.10 லட்சமாகவும், 2023ல் 7.55 லட்சமாகவும் அதிகரித்தது.
2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. H-1B போன்ற குடியேற்றம் அல்லாத மற்ற வேலை விசாவைப் பெறுபவர்களுக்கு டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகள் மார்ச் 2021 இல் காலாவதியாகிவிட்டன, மேலும் ஜோ பிடன் நிர்வாகத்தால் அந்த கடுமையான விசா புதுப்பிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications