ஒரு வார்த்தை மாறாமல்.. டிரம்பிற்கு திருப்பிக் கொடுத்த கிரேட்டா.. அசிங்கப்பட்ட அதிபர்.. வைரல் டிவிட்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக இயற்கை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் செய்திருக்கும் டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக மோசமான தோல்வியை நோக்கி அதிபர் டிரம்ப் சென்று கொண்டு இருக்கிறார். 214 எலக்ட்ரல் வாக்குகளை மட்டுமே வென்றுள்ள குடியரசு கட்சியின் டிரம்ப்.. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் இன்னும் 3 மாகாணங்களில் வெல்ல வேண்டும்.

இன்னொரு பக்கம் 264 வாக்குகளை வென்று இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன்.. இன்னும் ஒரே ஒரு மாகாணத்தில் வெற்றிபெற்றால் கூட அதிபராக தேர்வாகி விடுவார்.

என்ன

என்ன

இதனால் பிடன் வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்ப்.. தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். ஸ்டாப் தி கவுண்ட் என்று நேற்று டிவிட் செய்த டிரம்ப்.. தபால் வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கடுமையான கோரிக்கைகளை வைத்து வருகிறார்.

டிரம்ப்

நேற்று டிரம்ப் இது தொடர்பாக ஸ்டாப் தி கவுண்ட் என்று கோபமாக டிவிட் செய்து இருந்தார். இதை ரீ டிவிட் செய்த இயற்கை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்... டிரம்பை கடுமையாக கிண்டல் செய்துள்ளார். கிரேட்டா தன்பெர்க் தனது டிவிட்டில், மிக மோசம், டொனால்ட் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் அவர் தனது நண்பர்களுடன் பழைய படம் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.. சில் டொனால்ட் சில்!, என்று கிரேட்டா டிவிட் செய்து இருந்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

டிரம்ப் கோபப்படுவதை விட்டுவிட்டு படத்திற்கு செல்ல வேண்டும் என்று கிரேட்டா கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். கிரேட்டா இப்படி குறிப்பிட காரணம் என்ன என்று பலர் கேட்கலாம்.. இது கிரேட்டாவை பார்த்து டிரம்ப் சொன்ன வாசகம்தான். 2019ல் கிரேட்டா டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் இடம்பெற்று இருந்தார். இதை கிண்டல் செய்த டிரம்ப் இதேபோல் டிவிட் செய்து இருந்தார்.

கிரேட்டா

கிரேட்டா

கிரேட்டாவை டிரம்ப் விமர்சனம் செய்யும் விதமாக, மிக மோசம், கிரேட்டா தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் அவர் தனது நண்பர்களுடன் பழைய படம் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.. சில் கிரேட்டா சில்!, என்று டிரம்ப் டிவிட் செய்து இருந்தார். கிரேட்டாவை கிண்டல் செய்யும் விதத்தில் டிரம்ப் இந்த டிவிட்டை செய்து இருந்தார்.

நேரம் பார்த்து பதிலடி

தற்போது அதே டிவிட்டை வாசகம் மாறாமல்.. அச்சு அசலாக டிவிட் செய்து டிரம்பை கிரேட்டா விமர்சனம் செய்துள்ளார். நேரம் பார்த்து கிரேட்டா சரியான பதிலடி கொடுத்துள்ளார். சின்ன பெண்ணிடம் டிரம்ப் இப்படி அசிங்கப்பட்டு இருப்பது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+