அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,303 பேர் பலி.. பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,303 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    அமெரிக்காவில் டிசம்பரிலேயே கொரோனா வந்துவிட்டது.. புது மர்மம்!

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,61,970 ஆக உள்ளது. கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,11,431 ஆக உள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,21,147 ஆக உள்ளது.

    US records 1,303 coronavirus deaths in the last 24 hours

    கொரோனாவால் சீனாவுக்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில்தான். அங்கு கொரோனாவால் 10.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 56,976 பேர் இறந்துவிட்ட னர். மொத்தம் 1,38,989 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,303 பேர் பலியானது அந்நாட்டினரை கவலையடையச் செய்துள்ளது.

    அது போல் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,422 ஆக உள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 23,521 பேர் ஆகும். குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,832 பேராகும். கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என கருதப்பட்ட இத்தாலியில் 1,99,414 ஆக உள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 26,977 பேர் ஆகும்.

    பிரான்ஸில் 1,65,842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 45,513 பேர் குணமடைந்துள்ளனர். 23,293 பேர் பலியாகிவிட்டனர். ஜெர்மனியில் 1,58,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 6,126 ஆக உள்ளது. பிரிட்டனில் 1,57,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 135 பேர் மட்டும் குணமடைந்துள்ளனர். 21,092 பேர் பலியாகிவிட்டனர்.

    சவுதி அரேபியாவில் 18,811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,531 பேராகும். 144 பேர் பலியாகிவிட்டனர். சிங்கப்பூரில் 14,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு 1,095 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் பலியாகிவிட்டனர்.

    ஜப்பானில் 13, 441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 1,809 பேர் குணமடைந்தும், 372 பேருக்கு பலியாகிவிட்டனர். பாகிஸ்தானில் 13,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 292 பேர் பலியாகிவிட்டனர், 3,029 பேர் குணமடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+