இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்ய ’சகவாச’ நாடுகளுக்கு 500% வரி செல்லுமா? தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!
நியூயார்க்: அமரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள 500% வரிவிதிப்பு சட்டம் சட்டபூர்வமானதா என்பது தொடர்பான வழக்கில், அமெரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை. இதன் மூலம், இந்த வழக்கின் தீர்ப்பு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்காமல் தள்ளிவைத்தது. ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக தீர்ப்பு அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது தொடர்ந்து போரை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடும் வரி விதிக்க வேண்டும் என்ற யோசனை அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 'ரஷியா பொருளாதார தடைச் சட்டம் 2025' என்ற பெயரில் ஒரு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் பட்சத்தில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா 500 சதவீதம் வரி விதிக்க முடியும்.

டிரம்ப் 500% வரி சட்டம்
இந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரி விதித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் ஜவுளித் துறை உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி துறைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில், 500 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்திய பொருளாதாரத்திற்கு மேலும் சிக்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அமெரிக்க உச்சநீதிமன்றம்
இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க இறக்குமதியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. டிரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்றும், அதிபருக்கு தனிப்பட்ட முறையில் இத்தகைய வரிகளை விதிக்க சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த நவம்பர் 5-ம் தேதி நடந்த வாதங்களின்போது, நீதிபதிகள் பலரும் இந்த வரி விதிப்பு சட்டப்பூர்வமானதா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினர். 1977-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு அவசரகால சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு டிரம்ப் இந்த வரிகளை விதித்ததாக அவரது நிர்வாகம் விளக்கம் அளித்தாலும், கீழ்நீதிமன்றங்கள் அதனை ஏற்கவில்லை. அதிபர் தனது அதிகார வரம்பை மீறியதாக கீழ்நீதிமன்றங்கள் கூறிய தீர்ப்புகளுக்கு எதிராகவே இந்த மேல்முறையீடு தொடரப்பட்டுள்ளது.
பொருளாதார பதற்றம்
இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தற்போது, இரண்டாவது முறையாக தீர்ப்பு அறிவிப்பை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இன்று எந்த தீர்ப்பும் அறிவிக்கப்படவில்லை. இதனால், தீர்ப்பு ஜனவரி 26 அல்லது பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.
-
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications