மத்திய கிழக்கே நடுங்குது! அமெரிக்கா அனுப்பி வைத்த ராட்சசன் வந்துட்டான்! இஸ்ரேல் போரின் போக்கே மாறுது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் முக்கியமான போர் கப்பல் ஒன்று மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போர் தற்போது சர்வதேச போராக உருவெடுக்க தொடங்கி உள்ளது. இந்த போரில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக பல்வேறு உலக நாடுகள்.. முக்கியமாக வல்லரசு நாடுகள் இதில் நேரடியாக தலையிட தொடங்கி உள்ளன.

இதனால் போர் கைமீறி போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த போரில் ஏற்கனவே ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. ஈரான் படைகள் லெபனான் வழியாக இஸ்ரேலை தாக்கி வருகிறது. அதேபோல் லெபனான் இதில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. இதனால் மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

USS Gerald R Ford aircraft carrier strike group has arrived in the eastern Mediterranean in Israel vs Palestine conflict

ஏற்கனவே லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸ் படைக்கு ஆதரவாக படைகளை அனுப்பி உள்ளது. ஹமாஸ் படைக்கு ஆதரவாக போர் வீரர்கள், ஆயுதங்கள், நிதி உதவிகள், உளவு உதவிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏற்கனவே அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், உளவு உதவிகளை வழங்கி வருகிறது.

மாற்றம்: இந்த நிலையில்தான் அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்து உள்ளது.

இதனால் போர் தற்போது அமெரிக்கா vs பாலஸ்தீனம், ஈரான் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுக்கும் என்கிறார்கள்.

( பெரிய தவறு பண்ணிட்டீங்க.. அமெரிக்காவிற்கு புடின் வார்னிங்.. இஸ்ரேலுக்கு எதிராக குதித்த ரஷ்யா.. திக்)

அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (சிவிஎன்-78), டிகோண்டெரோகா ஏவுகணை கப்பல் யுஎஸ்எஸ் நார்மண்டி (சிஜி 60), அத்துடன் ஆர்லீ-பர்க் கிளாஸ் ஏவுகணை, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர் (டிடிஜி 116), யுஎஸ்எஸ் ராமேஜ் (டிடிஜி 61), யுஎஸ்எஸ் கார்னி (டிடிஜி 64), மற்றும் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் (டிடிஜி 80) ஆகிய போர் கப்பல்கள், போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.

USS Gerald R Ford aircraft carrier strike group has arrived in the eastern Mediterranean in Israel vs Palestine conflict

போர்: யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு அமெரிக்காவின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாக பரவலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,092 அடி (333 மீட்டர்) நீளமும், அதன் விமான தளத்தில் 256 அடி (78 மீட்டர்) அகலமும் மற்றும் 250 அடி (76 மீட்டர்) உயரமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பலாகும்.

இதில் 3000 வீரர்கள் குறைந்த பட்சம் இருக்க முடியும். 10 ஆயிரம் வீரர்களை கூட கொண்டு செல்ல முடியும். 25 போர் விமானங்களை கொண்டு செல்ல முடியும். அணு ஆயுதங்களை கூட எடுத்து செல்ல முடியும். இந்த அனைத்து உபகரணங்களுடன்தான் தற்போது அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+