பெரிய தவறு பண்ணிட்டீங்க.. அமெரிக்காவிற்கு புடின் வார்னிங்.. இஸ்ரேலுக்கு எதிராக குதித்த ரஷ்யா.. திக்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளை இவர்கள் பார்க்கவில்லை. அவர்களின் கஷ்டங்களை பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சனம் வைத்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரச்சனையில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இந்த பிரச்சனையில் தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன . அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை இங்கே அனுப்பி உள்ளது . இதில் தற்போது மறைமுகமாக சவுதி - ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட உள்ளது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

Russia takes a huge stand against USA in the Israel Palestine conflict

சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.

ரஷ்யா தலையீடு: இப்படி பல நாடுகள் இந்த விவகாரத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு உள்ளது. தற்போது ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என்று இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நான் சொன்ன கருத்துக்கு பலர் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

( இதுதான் கெத்து.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹமாஸ் வீரர் உடலில்.. டிராக்கரை மாட்டிய இஸ்ரேல் வீரர்.. ப்பா )

அவர்கள் சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றனர். தாங்கள் வைத்ததுதான் சட்டம்.. நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது. இரண்டு தரப்பும் அமைதியை இழந்துள்ளது.

Russia takes a huge stand against USA in the Israel Palestine conflict

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளை இவர்கள் பார்க்கவில்லை. அவர்களின் கஷ்டங்களை பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேல் மதிக்கவில்லை.

அமெரிக்காவும் மதிக்கவில்லை. தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். ஆனால் அமெரிக்கா அதை பற்றி நினைப்பது இல்லை. பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள் , பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்காமல் போய்விட்டது என்று ரஷ்ய அதிபர் புடின் விமர்சனம் வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+