Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் 13 நாட்களில் அமெரிக்க தேர்தல்! விண்வெளியில் இருந்து சுனிதா எப்படி ஓட்டு போடுவாங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அனைவரும் வாக்களிக்க தயாராகியுள்ள நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அமெரிக்க வீரர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்வெளி என்பது நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய இடம். இந்த இடத்தில் பூமி எனும் சிறிய கோளில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன. வேறு கிரகங்களில் உயிர்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட, அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. எனவே, இது குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் மாதக்கணக்கில் விண்வெளியில் தங்கி வருகின்றனர். அப்படி சர்வதேச விண்வெளி மையத்திற்கு போனவர்தான் சுனிதா வில்லியம்ஸ்.

sunita williams us presidential election 2024 2024

இவரது பயண காலம் வெறும் ஒருவாரம்தான். சுனிதாவுடன், புட்ச் வில்மோர் எனும் மற்றொரு விண்வெளி ஆய்வாளரும், போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் எனும் விண்கலத்தில், பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்.

போகும்போது எந்த பஞ்சாயத்தும் இல்லை. போகுமிடம் வெகுதூரமில்லை என்று ஜாலியாக போய்விட்டனர். ஆனால் அங்கிருந்து திரும்பும்போதுதான் பஞ்சாயத்து வெடித்தது. அதாவது விண்கலத்தின் திரஸ்டரில் பிரச்னை எழுந்தது. விண்கலத்தின் இந்த பகுதிதான் பத்திரமாக தரையிறங்க உதவும். இதுவே பிரச்னையெனில் சரியாக தரையிறங்க முடியாமல், ராக்கெட் வெடித்து சிதறிவிடும். எனவே, விஞ்ஞானிகள் உடனடியாக இதனை சரி செய்யும் பணியில் இறங்கினர்.

எவ்வளவுதான் முயன்றாலும், இந்த பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. தீபாவளி லீவு முடிந்து சென்னைக்கு வேலைக்கு கிளம்பும்போது, வீட்டில் குழந்தைகளிடம், "நாளைக்கு வந்துடுவேன்டா தங்கம்" என சொல்லிவிட்டு கிளம்புவோமே அந்த மாதிரி, இதோ இப்போ வந்துடுவாங்க.. அடுத்த மாசம் வந்துடுவாங்க என சுனிதா வில்லியம்ஸ் பற்றி நாசா அடிக்கடி அப்டேட் கொடுத்து வந்தது. ஆனால், சொன்ன தேதியில் சுனிதா பூமிக்கு வரவில்லை. எனவே பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கேள்விகள் எழுந்தன.

பின்னர் இறுதியாக, வெறும் கையுடன் ஸ்டார்லைனர் மட்டும் பூமி வந்து சேர்ந்தது. இதனையடுத்து எலான் மஸ்கின் டிரான் எனும் விண்வெளி ஓடம் சுனிதா வில்லியம்ஸை மீட்க சென்றிருக்கிறது. அவர்கள் இருவரும் அடுத்த ஆண்டுதான் பூமிக்கு வருவார்களாம்.

இதெல்லாம் ஓகே, இன்னும் 13 நாட்களில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இவர்கள் விண்வெளியிலேயே இருந்துக்கொண்டு எப்படி ஓட்டு போடுவார்கள் என்று பலருக்கும் சந்தேகம் எழலாம். இதற்காக அமெரிக்க அரசு சிறப்பான வழிமுறைகளை கையாள்கிறது.

அதன்படி, விண்வெளியில் இருந்தவாறு வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் தங்களது வாக்கு யாருக்கு என்பது குறித்து மெயில் அனுப்புவார்கள். அது நேராக விண்வெளி வீரர் குடியிருக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்லும். அங்கு மற்ற வாக்குகளுடன் இவரது வாக்கும் சேர்க்கப்படும். இப்படி அனுப்பப்படும் மெயிலை அவ்வளவு எளிதாக ஹாக் செய்துவிட முடியாது. இதற்காக பிரத்யேக வழிமுறையை நாசாவும், அந்நாட்டு தேர்தல் ஆணையமும் கையாள்கிறது.

விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் முறை கடந்த 1997லிலிருந்து அமெரிக்கா பின்பற்றி வருகிறது. டேவிட் உல்ஃப் எனும் அமெரிக்க விண்வெளி வீரர்தான் விண்வெளியிலிருந்து முதன் முறையாக வாக்களித்தார்.

என்ன மக்களே விண்வெளியில் இருப்பவர்களே வாக்களிக்க ரெடியாகிவிட்டார்கள், நாமும் 100% வாக்களிப்பதை எப்போது உறுதி செய்யப்போகிறோம்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+